|
வருக! றமழானே!
வருக! றமழானே!

வருக! வருக! றமழானே!
வரவேற்கின்றோம் உன்னை
வையகத்தின் கறைகள் போக்க
வாழ்க்கையை நல் நோக்கமாக்க
வருக! வருக! றமழானே
உலக மக்களுக்கு
உன்னத மருந்தாக
உள்ளங்கள் மகிழ்வுறும்
உன்னத விருந்தாக
வருக! வருக! றமழானே
இறைவன் அருளிய
இனியதொரு அமலே
இன்புறும் காலமே
இமை காப்போம் உன்னை
வருக! வருக! றமழானே
ஏழைகளின் பசியறிந்து
ஏகவல்லோன் ஏவலையும்
ஏற்று மனம் போற்றுகின்ற
எங்கள் புனிதமாதமே
வருக! வருக! றமழானே
பசித்திருந்து பலபேர்க்கு
பகிர்ந்தளிக்கும் தர்மம்
பாரினிலே பெரும் ஒளியாய்
படைத்தவன் முன் பெரும் விம்பம், அதனால்
வருக! வருக! றமழானே
உண்ணுவதும், பருகுவதும்
உள்ளங்களுக்கு இன்பம்
உண்மை வணக்கங்களால்
உனைக் கொண்டு அகன்றிடும் துன்பம்
வருக! வருக! றமழானே
நிந்தவூர் மக்கீன் ஹாஜ்
|