ஹிஜ்ரி வருடம் 1433 றமழான் மாதம் பிறை 04
நந்தன வருடம் ஆடி மாதம் 09ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,JULY, 24, 2012
வரு. 80 இல. 173
 

வியட்னாம், தாய்வான் சொந்தம் கொண்டாடும் தீவில் சீன படை

வியட்னாம், தாய்வான் சொந்தம் கொண்டாடும் தீவில் சீன படை

சர்ச்சைக்குரிய தென் சீன கடற்பகுதியில் உள்ள தீவுகளுக்கு சீனா இராணுவ படை ஒன்றை அமைக்கவுள்ளது. இதற்கான அனுமதியை சீன அரசு அளித்துள்ளது. இந்த நடவடிக்கை பிராந்திய நாடுகளுக்கு இடையில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இராணுவப் படைத்தளம் வூடி தீவின் சன்ஷா நகரில் அமைக்கப்படவுள்ளது. இந்த நகருக்கு கடந்த ஜூனில் சீன அரசு தனி நிர்வாக சபை ஒன்றையே அமைத்தது. இதில் நகரின் கொங்கிரஸ் சபைக்கு 45 பிரதிநிதிகளையும் சீன அரசு நியமித்துள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு வூடி தீவுக்கு சொந்தம் கொண்டாடும் பிராந்திய நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

வூடி தீவு அமைந்துள்ள தென் சீன கடற் பகுதியின் பரகல் தீவுகளுக்கு வியாட்னாம், தாய்வானும் சொந்தம் கொண்டாடுகின்றன. எனினும் 1974 ஆம் ஆண்டு மேற்படி இரு நாடுகளுடனான மோதலுக்கு பின் சீனா இந்த தீவுகளை கைப்பற்றின. இங்கு மொத்தம் ஒரு சில ஆயிரம் மக்களே வசிக்கின்றனர். அனைவரும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தீவுகளுக்கு சீனாவின் மக்கள் புரட்சி படையின் இராணுவ தளம் ஒன்றை அமைத்து தீவுகளின் பாதுகாப்பு மற்றும் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கையை ஒட்டி வியட்நாமில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று ள்ளன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி