ஹிஜ்ரி வருடம் 1433 றமழான் மாதம் பிறை 04
நந்தன வருடம் ஆடி மாதம் 09ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,JULY, 24, 2012
வரு. 80 இல. 173
 

உலகில் செல்வந்தர்கள் பதுக்கி வைத்த சொத்துக்களின் பெறுமதி 21 டிரில். டொலர்

உலகில் செல்வந்தர்கள் பதுக்கி வைத்த சொத்துக்களின் பெறுமதி 21 டிரில். டொலர்

உலகில் செல்வந்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சுமார் 21 டிரில்லியன் டொலர் பெறுமதியான சொத்துகளை வரி விதிக்காமல் மறைத்து வைத்திருப்பதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

இது அமெரிக்கா மற்றும் ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவாகும் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுகள் 280 பில்லியன் டொலருக்கு மேலான வரி வருவாயை இழந்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதில் உலக தனியார் நிதி பெறுமதியில் காணிகள், தங்கம், பந்தய படகுகள் மற்றும் பந்தய குதிரைகள் தவிர்த்து உள்ள நிதி சொத்துகளின் பெறுமதி 21 முதல் 32 டிரில்லியன் டொலர்களாக இருக்கும் என இந்த கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி உலகில் உள்ள ஒரு கோடிப்பேரின் சொத்து பெறுமதியின் பாதி அளவை ஒரு லட்சம் பேர் தாம் மறைத்து வைத்துள்ள சொத்துகளின் மூலம் பெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வரி செலுத்தாதோர் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள வரிக்கான நீதி வலையமைப்பு என்ற குழு மேற்கொண்ட ஆய்விலேயே இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் உலகில் உள்ள மிகப் பெரிய வங்கிகள் தமது வாடிக்கையாளர்களின் சொத்துக்களை பதுக்கி வைப்பதற்கு உதவி புரிந்து வருவதாகவும் இந்த குழு குற்றம் சாட்டியுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி