ஈராக்கில் துப்பாக்கிச்சூடு, குண்டு தாக்குதல்; 82 பேரளவில் பலி
ஈராக்கில் துப்பாக்கிச்சூடு, குண்டு
தாக்குதல்; 82 பேரளவில் பலி
ஈராக்கில் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு தாக்குதல்களில் 82 பேரளவில்
கொல்லப்பட்டுள்ளனர். இதில் பாதுகாப்பு படையினர் பலர் பலியாகியுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
ஈராக் தலைநகர் பக்தாத் மற்றும் வடக்கு நகரங்களில் நேற்று இடம்பெற்ற இந்த
வன்முறைகளில் 144 பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதில் சுன்னி முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியான தாஜியில் இடம்பெற்ற தாக்குதலில் 24
பேரளவில் கொல்லப்பட்டனர்.
அதேபோன்று பக்தாதின் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக
வசிக்கும் சாதிர் பகுதியின் அரச கட்டடம் ஒன்றை இலக்கு வைத்து கார் குண்டு தாக்குதல்
நடத்தப்பட்டது. தவிர எண்ணெய் வளம்கொண்ட நகரான கிர்குக்கில் குறைந்தது 7 கார் குண்டு
தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த தாக்குதல்களில் இராணுவ வீரர்கள் பலர்
கொல்லப்பட்டுள்ளனர். சலஹுத்தின் மாகாண இராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில்
பல இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தவிர பொலிஸ் சோதனைச் சாவடி மீது கார் குண்டு
தாக்குதல் நடத்தப்பட்டுள்ள இராணுவ தளத்தின் மீது மோட்டார் தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது. மற்றொரு பொலிஸார் தனது வீட்டில் வைத்து
சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
தாஜி நகரில் 5 முதல் 6 குண்டு தாக் குதல் இடம்பெற்றுள்ளதாகவும் அதில் குறைந்தது 14
பேர் கொல்லப்பட்டுள்ள தாகவும் பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். இதில்
தற்கொலை தாக்குதலில் 10 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் 13ஆம் திகதி ஈராக்கில் இதுபோன்று தொடர் தாக்குதல்களில் 84 பேர்
கொல்லப்பட்டதோடு 300 பேரளவில் காயமடைந்தனர்.