இலங்கை - இந்திய கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கான உத்தியோபூர்வ அனுசரணை
எலிபன்ட் ஹவுஸ் ஐஸ் கிரீம்
இலங்கை - இந்திய கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கான
உத்தியோபூர்வ அனுசரணை
இலங்கை மக்களின் அபிமானத்தை வென்ற முன்னணி உறை உணவுப் உற்பத்திப் பொருளான எலிபன்ட்
ஹவுஸ் ஐஸ் கிரீம், இலங்கை- இந்திய அணிகளுக்கிடையே நடைபெற்று வருகின்ற கிரிக்கெட்
தொடரின் உத்தியோகபூர்வ ஐஸ் கிரீம் சேவை வழங்குனராக செயற்படுகின்றது.
இத் தொடரில்
விறுவிறுப்பான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளும் 20க்கும் 20
சர்வதேச போட்டியொன்றும் இடம்பெறவுள்ளன.
கிரிக்கெட் விளையாட்டோடு இணைந்து சேவைகளை வழங்குவதில் எலிபன்ட் ஹவுஸ் ஐஸ் கிரீம்
என்றும் முக்கிய பங்கு வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்நாட்டில்
இடம்பெறும் கிரிக்கெட் தொடர்களில் மட்டுமல்லாது ஏனைய உள்ளூர் செயற்பாட்டு
நடவடிக்கைகளிலும் எலிபன்ட் ஹவுஸ் ஐஸ் கிரீம் தமது அனுசரணையை வழங்கி வருவதில்
தொடர்ந்தும் முன்னணியில் திகழ்கின்றது.
கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின்போது
எலிபன்ட் ஹவுஸ் நிறுவன உணவு உற்பத்தித் தலைவர் நீல் சமரசிங்க, இலங்கை கிரிக்கெட் சபை
பிரதான நிறைவேற்று அதிகாரி அஜித் ஜயசேகரவிடம் உத்தியோபூர்வ அனுசரணைத்துவம்
கையளிக்கப்பட்டது.