உதைபந்தாட்டத்தில் ஜம்பவான்களாக விளங்கும் மன்னார் மாவட்ட அணிக்கு கிளிநொச்சி
மாவட்ட அணி காட்டிய எதிர்ப்பினை சமாளிக்க முடியாது திண்டாடிய போதிலும் இறுதி இரண்டு
நிமிடம் இருக்கையில் ஒரு கோலைப் பெற்று தனது பெயரை மன்னார் மாவட்ட அணி காப்பாற்றியது.
வட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் மாவட்ட அணிகளுக்கு இடையே நடத்திய
ஆண்களுக்கான உதைபந்தாட்ட இறுதிப் போட்டி யாழ்ப்பாணம் துரை யப்பா விளையாட்டரங்கில்
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.
இறுதிப் போட்டியில் மன்னார் மாவட்ட அணியும் கிளிநொச்சி மாவட்ட அணியும் மோதிக்கொண்டன.
மன்னார் மாவட்ட அணி இலகுவான வெற்றியைப் பெறும் என்று உதை பந்தாட்ட ஆர்வலர்கள்
எதிர்பார்த்த போதிலும் இந்த எண்ண த்திற்கு சவால் விடும் வகையில் கிளிநொச்சி மாவட்ட
அணி மிகவும் உற்சாகமாக விளையாடி பலருடைய பாராட்டையும் பெற்றது.