இங்கிலாந்துக்கு எதிரான டெஸ் டில் தென்னாபிரிக்க வீரர் அம்லா முச்சதம் அடித்து
புதிய சாதனை படைத்திருக்கிறார்.
இங்கிலாந்து - தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி
லண் டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து
385 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.
அடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய தென்னாபிரிக்க அணி 3வது நாள் முடிவில் 2
விக்கெட் இழப் புக்கு 403 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ஹஷிம் அம்லா 183 ஓட்டங்களுட
னும், கலிஸ் 82 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் 4வது நாள் ஆட்டம் நேற்று முன்தினம் நடந்தது. தென்னா பிரிக்க
துடுப்பாட்ட வீரர்களின் ஆதி க்கம் நீடித்தது. அம்லா - கலிஸ் கூட்டணியை உடைக்க
முடியாமல் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் விழி பிதுங்கி போனார்கள். அம்லா இரட்
டைச் சதத்தை கடந்த அதே வேளை யில் கலிஸ் தனது 43வது டெஸ்ட் சதத்தை அரங்கேற்றினார்.
அம்லாவின் ஓட்ட வேட்டையை இங்கிலாந்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அபாரமாக ஆடிய
அவர் 300 ஓட்டங்களை கடந்து முச்ச தம் விளாசிய முதல் தென்னாபிரிக்க வீரர் என்ற புதிய
சாதனையை படை த்தார். இதற்கிடையே கலிஸ் இர ட்டை சதத்தை நோக்கி முன்னேறி னார். ஆனால்
அவருக்கு இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு வழங்கப்பட வில்லை.
தென்னாபிரிக்க அணி தேனீர் இடை வேளையின் போது முதல் இன்னி ங்சில் 2 விக்கெட்டுக்கு
637 ஓட்டங் கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆம்லா 311 ஓட்டங்களுடனும் (529 பந்து,
35 பவுண்டரி), கலிஸ் 182 ஓட்டங்களுடனும் (326 பந்து, 23 பவுண்டரி, ஒருசிக்சர்)
ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
அம்லா - கலிஸ் 3வது விக்கெட்டு க்கு 377 ஓட்டங்கள் திரட்டினர். தென் னாபிரிக்க ஜோடி
ஒன்றின் 3வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஏற்கனவே அம்லா - சுமித் இணை 2வது
விக்கெட்டுக்கு 259 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்துக்கு எதிராக ஒரே
இன்னிங்சில் இரண்டு ஜோடி கள் 250 ஓட்டங்களுக்கு மேல் எடுத் தது இதுவே முதல்
முறையாகும்.
பின்னர் 252 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து
அணி குக் (0), ஜொனதன் டிராட் (10) ஆகியோரின் விக்கெட்டுகளை சீக்கிரம் இழந்து
அதிர்ச்சி அடைந்தது. 13 ஓவர் முடிந்திருந்த போது இங்கிலாந்து 2 விக்கெட்டுக்கு 37
ஓட்டங்கள் எடுத்திருந்தது.