ஹிஜ்ரி வருடம் 1433 றமழான் மாதம் பிறை 04
நந்தன வருடம் ஆடி மாதம் 09ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,JULY, 24, 2012
வரு. 80 இல. 173
 

தொடக்க விழாவில் பங்கேற்கிறார் பெக்காம்

தொடக்க விழாவில் பங்கேற்கிறார் பெக்காம்

லண்டன் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் இங்கிலாந்து உதைபந்து அணியின் முன்னாள் தலைவர்டேவிட் பெக்காம் பங்கேற்கிறார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் திடீரென்று அழைக்கப்பட்டுள்ளார் பெக்காம்.

தொடக்க விழாவில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளதால் பெக்காம் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். அவரின் சொந்த ஊரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதைவிட வேறு என்ன பெரிதாக இருக்க முடியும் என்று பெக்காமுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இங்கிலாந்து உதைபந்து அணியில் இடம்பெறுவோம் என்று பெக்காம் எதிர்பார்த்திருந்த வேளையில் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி