ஹிஜ்ரி வருடம் 1433 றமழான் மாதம் பிறை 04
நந்தன வருடம் ஆடி மாதம் 09ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JULY,24, 2012

Print

 
போலி தங்க நகைகளை அடகு வைத்து மோசடி; ஹட்டனில் 2 பெண்கள் உட்பட மூவர் கைது

போலி தங்க நகைகளை அடகு வைத்து மோசடி; ஹட்டனில் 2 பெண்கள் உட்பட மூவர் கைது

போலி தங்க நகைகளை அடகு வைத்து நிதி மோசடி செய்து வந்த இரு பெண்கள் உட்பட மூவர் ஹட்டன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 4 அடகு பிடிக்கும் நிலையங்களில் இருந்து 12 இலட்சம் ரூபா பணம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் பிரதான வீதியிலுள்ள அடகு பிடிக்கும் நிலையமொன்றினூடாக போலியாகத் தயாரித்த தங்க நகைகளை அடகு வைக்க முற்பட்ட போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி நிதி மோசடி செய்தது தொடர்பில் இதில் ஒரு சந்தேக நபருக்கு எதிராக மாலிகாகந்த நீதிமன்றத்தில் 43 வழக்குகள் உள்ளதாகவும் பொலிஸார் கூறினர். சந்தேக நபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப் பட்டுள்ளனர்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

webmanager@lakehouse.lk