ஹிஜ்ரி வருடம் 1433 றமழான் மாதம் பிறை 04
நந்தன வருடம் ஆடி மாதம் 09ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,JULY, 24, 2012
வரு. 80 இல. 173
 
கடல் எல்லைக்குள் அத்துமீறிய 23 தமிழக மீனவர்கள் கைது

கடல் எல்லைக்குள் அத்துமீறிய 23 தமிழக மீனவர்கள் கைது

* 5 வள்ளங்களும் கைப்பற்றப்பட்டன

* ஆகஸ்ட் 6ம் திகதிவரை தடுத்து வைப்பு

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களது 5 வள்ளங்களையும் கைப்பற்றியுள்ளதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுல சூரிய தெரிவித்தார்.

கடந்த 22 ம் திகதி மாலை 3.30 மணியளவில் தம்பபன்னை கடற்படை முகாமிலிருந்து புறப்பட்ட கடற்படையின் அதிவேக படகுகள் பேசாலை கடற்பரப்பில் இவர்களை கைது செய்துள்ளனர்.

ஐந்து படகுகள், மற்றும் மீன்பிடி உபகரணங்களுடன் தமிழக மீனவர் 23 பேரும் நேற்று மன்னார் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி வரை 23 தமிழக மீனவர்களையும் தடுத்து வைக்குமாறு மாஜிஸ்திரேட் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

ராமேஸ்வரத்தை சேர்ந்த செல்லத்துரை என்பவருக்குச் சொந்தமான 2 படகுகளில் இருந்த சுப்பிரமணி (வயது 45), முருகேசன், திருமுருகன், பாலமுருகன், முனியசாமி, முருகன், மாரி, பஞ்சவர்ணம், பாலமுருகன் ஆகியோரும் முருகன் என்பவரின் படகில் இருந்து முத்துமாணிக்கம், அண்ணாமலை, குமார், நம்புராஜன், முருகன் ஆகியோரும் ஜஸ்டின் என்பவரின் படகில் இருந்த அந்தோனி சிலுவை, கருப்பையா, நசீர், கோவிந்தன் ஆகியோரும் மோட்ச அலங்காரம் என்பவரின் படகில் இருந்த ராஜ்பு, ஜுலியஸ், கிறிஸ்டோபர், எல்ரோம், நிவாசர் என மொத்தம் 23 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி