ஹிஜ்ரி வருடம் 1433 றமழான் மாதம் பிறை 04
நந்தன வருடம் ஆடி மாதம் 09ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,JULY, 24, 2012
வரு. 80 இல. 173
 
வர்ணச்சாயங்களால் வீதிகளில் எழுதுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் வேண்டுகோள்

வர்ணச்சாயங்களால் வீதிகளில் எழுதுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் வேண்டுகோள்

கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளின் தேர்தலை முன்னிட்டு கட்சி மற்றும் குழுக்களின் சின்னங்கள், வேட்பாளர்களின் பெயர்கள், இலக்கங்கள் ஆகியவற்றை வர்ணச் சாயங்கள் உபயோகித்து பெருந்தெருக் களில் எழுதுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து வேட்பாளர்களிடம் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய வேண்டு கோள் விடுத்துள்ளார்.

பெருந்தெருக் களில் சின்னங்கள், பெயர்கள், இலக்கங்கள் என்பவற்றை எழுதுவதற்காக உபயோகிக்கப் படும் வர்ணச் சாயங்களினால் வாகன விபத்துக்கள் ஏற்படுவதற் கான சாத்தியக்கூறுகள் காணப்ப டுகின்றன.

இதன் விளைவாக உயிர்ச்சேதம், பொருட் சேதம் ஏற்படுமென் பதனால், இது சட்டவிரோதச் செயலாகவே கருதப்படுகிறது. அந்தவகையில், இது தேர்தல் சட்டங்களை மீறும் செயலெனவும் பெருந்தெருக்களை சேதப்படுத்துகின்ற செயலாகவும் கருதப்படுகிறது.

எனவே, இத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடு மெனவும் தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி