இந்திய புதிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி மஹிந்த வாழ்த்து
இந்திய புதிய ஜனாதிபதிக்கு
ஜனாதிபதி மஹிந்த வாழ்த்து
இந்தியாவின் 13வது ஜனாதிபதி யாக தெரிவு செய் யப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜிக்கு
வாழ்த்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மலர்ச் செண்டுகளையும்
அனுப்பி வைத்துள்ளார்.
நீண்ட காலமாக நிலைத்து நிற்கும் இந்திய - இலங்கை உறவுகள் மேலும் வலுவடைய பிரணாப்
முகர்ஜியின் பங்களிப்புகள் உதவும் என்பதால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதயபூர்வமான
வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை 25ம் திகதி பிரணாப் முகர்ஜி
உத்தியோகபூர்வமாக பதவியேற்ற பின்னர் இலங்கையின் சம்பிரதாய பூர்வமான வாழ்த்துக்கள்
அனுப்பி வைக்கப்படவுள்ளன.