ஹிஜ்ரி வருடம் 1433 றமழான் மாதம் பிறை 04
நந்தன வருடம் ஆடி மாதம் 09ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,JULY, 24, 2012
வரு. 80 இல. 173
 
கணவன், மனைவி சடலங்கள் மீட்பு; காணித்தகராறினால் கொலையானதாக சந்தேகம்

கணவன், மனைவி சடலங்கள் மீட்பு; காணித்தகராறினால் கொலையானதாக சந்தேகம்
 

கடுவன, கொமடிய பகுதி கணவன் மனைவி இருவரின் சடலங்கள் நேற்றுக் காலை மீட்கப்பட்டுள்ளன. 52 வயதான பெண் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதோடு 60 வயதான கணவர் வீட்டு முன்பாக உள்ள மரத்தில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

இவர்களது மகனும் (32 வயது) வெட்டுக்காயங்களுடன் எம்பிலிப்பிட்டிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காணித்தகராறு காரணமாக இவர்கள் கொலை செய்யப்பட்டி ருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இவை கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்படுகிறது. இருவரதும் பிரேத பரிசோத னைகள் நேற்று நடைபெற ஏற்பாடாகியிருந்தது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி