கேகாலை மாவட்ட தமிழ் பிரதிநிதியை வென்றெடுக்க இறுதி சந்தர்ப்பம்
கேகாலை மாவட்ட தமிழ் பிரதிநிதியை
வென்றெடுக்க இறுதி சந்தர்ப்பம்
ஐக்கியப்பட்டு வாக்களித்து சமூக உரிமையை வெல்வோம்
கேகாலை மாவட்டத்தில் இதுவரையில் ஒரு தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றிருப்போமேயானால்
இன்று நாம் எத்தனையோ படிகளை கடந்து வந்திருக்க முடியும் என இ.தொ.கா.
பொதுச்
செயலாளரும், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன்
தொண்டமான் எட்டியாந்தோட்டையில் அனைத்து தமிழ் மலையக கட்சிகளின் முதலாவது தேர்தல்
பிரசாரக் கூட்டத்தில் தமது ஆதங்கத்தினை வெளிப்படுத்திருக் கின்றார்.
அமைச்சர்
தொண்டமான் அங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது, கேகாலை மாவட்டத்தில் இன்று எமது
சமூகத்தவரின் கல்வி நிலை, தமது பிள்ளைகளை பாடசாலைக்கு சேர்த்துக் கொள்ளல்,
அபிவிருத்திகள் போன்ற பல்வேறு துறைகளிலும் பின்னடைவுள்ளது.
மலையகத்தை பொறுத்தவரையில்
அர சியல் ரீதியில் எம்மக்களுக்காக பெரும் அபிவிருத்தி பணிகளை செய்து வருகின் றோம்.
இதனால் அங்கு துரித முன்னேற் றங்கள் காணப்படுகின்றன.
கேகாலை மாவட்டத்தில் அநேக தமிழ் வித்தியாலயங்கள் நிர்மாணிக்கப் பட்டுள்ளன. ஆனால்
கல்வி, நிலை பின்னோக்கி செல்வதால் பெற்றோர்களின் அபிலாஷைகள் நிறைவேறவில்லை.
இதனையெல்லாம் தட்டிக்கேட்பதற்கு மாகாண சபைகளிலோ, பாராளுமன்றத்திலோ எமக்கென ஒரு
பிரதிநிதித்துவம் இருந் திருக்குமேயானால் இங்கு நிலைமைகள் வேறாக இருந் திருக்கும்.
எனவே, நன்கு சிந்தித்து செயல்படுங்கள். உங்களை வழிநடத்து வதற்காக நாம் அனைத்து
மலையக தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து உங்கள் முன் ஒன்று கூடியிருக்கின்றோம்.
எமது அடிப்படை உரிமைகளையும், சலுகைகளையும் பெறவேண்டிய நிலையிலும் இருக்கின்றோம்.
கட்டுக்கோப்பான ஐக் கியப்பாட்டின் மூலமாகவே இவற்றை எம்மால் அடைய முடியும். இந்த
மாகாண சபை தேர்தல் தொகுதிகளிலும் மக்களின் கட்டுக்கோப்பை தொடர்ந்து நாம் பாதுகாக்க
வேண்டும். இதன் பொருட்டே கேகாலை மாவட்டத்தில் நாம் ஒன்றிணைந்து 21 வேட்பாளர்களை
நிறுத்தியிருக்கின்றோம். எமது முயற்சியை தவிடுபொடியாக்காமல் செயற்பட முன்வாருங்கள்.