வட மாகாண மருத்துவ அதிகாரிகள் இன்று அடையாள வேலை நிறுத்தம்
வட மாகாண மருத்துவ அதிகாரிகள்
இன்று அடையாள வேலை நிறுத்தம்
மர்லின் மரிக்கார்
வட மாகாணத்திலுள்ள அரசாங்க ஆஸ்பத்திரிகளில் கடமையாற்றும் மருத்துவ அதிகாரிகள் இன்று
செவ்வாய்க்கிழமை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் சம்பவம் குறித்து பாரபட்சமற்ற முறையில் நீதியான
விசாரணையை நடத்தும்படி கோரியே இந்த அடையாள வேலை நிறுத்தத்தை நடத்துவதாக அரசாங்க
மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் டொக்டர் பி. நிரஞ்ஜன் நேற்று
தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், யாழ். போதனா ஆஸ்பத்திரியின் அரச சொத்துகள்
துஷ்பிரயோகம் செய் யப்பட்ட சம்பவம் குறித்து நாம் சுகாதார அமைச்சுக்கு ஏற்கனவே பல
முறை புகார் செய்தோம். இப்புகார்களின் அடிப்படையில் சுகா¡ர அமைச்சு இச் சம்பவம்
குறித்து ஆரம்ப விசாரணை நடத்தியது.
இவ்விசாரணையின் அடிப்படையில் ஆஸ்பத்திரி பணிப்பாளர் உட்பட மூவ ருக்கு எதிராக மேலதிக
விசாரணை நடத்தப்படுவது அவசியமென சுகாதார அமைச்சின் விசாரணைக் குழு சுட்டிக்
காட்டியுள்ளது.
இதனடிப்படையில் இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொது சேவைகள் ஆணைக் குழுவின்
வழிகாட்ட லின்படி சம்பந்தப்பட்டவர்களை இடமாற்றம் செய்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாய கத்திடம் வலியுறுத்தினோம்.
ஆனால் எமது கோரிக்கைக்கு
இணக்கம் தெரிவிக்கப் படாததால் இன்று அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளுவதாகவும்
அவர் குறிப்பிட்டார்.
இவ்விடயம் தொடர்பாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டொக்டர்
அனுருத்த பாதெனிய தலைமை யிலான குழுவினர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடன்
நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சு வார்த்தையின் பின்பே சங்கத்தினர் இம்
முடிவினை எடுத்திருப்பதாகவும் டொக்டர் நிரஞ்ஜன் கூறினார்.