அமைச்சர்கள் மாறினாலும் பொது தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது ஒருபோதும்
நிறுத்தப்படக் கூடாது
அமைச்சர்கள் மாறினாலும் பொது
தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது
ஒருபோதும் நிறுத்தப்படக் கூடாது
நுவரெலியாவிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம்
அமைச்சர்கள் மாற்றம் பெற்றாலும் அரசாங்கம் மாறினாலும் பொதுத் தீர்மானங்கள்
நிறைவேற்றப்படு வது ஒருபோதும் நிறுத்தப்படக் கூடாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
அவர்கள் தெரிவித்தார்.
நேற்று நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் அமைச்சர்கள், அரச அதிகாரிகளுக்கு
இது தொடர்பில் வலியுறுத்திய ஜனாதிபதி, உரிய காலத்தில் அபிவிருத்தித் திட்டங்களை
நிறைவு செய்ய முடியாது போனால், அதனை நிறைவேற்றக்கூடிய அரச நிறுவனங்களுக்கு அதனைப்
பொறுப்பேற்றுக்கொள்ளத் தயங்கக் கூடாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் நற்பெய ரையும் பாதுகாத்துக்கொள்ளும் வகையில்
சகலரும் செயற்ப டுவது முக்கியம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். நாட்டின் மாவட்டங்கள்
ரீதியான அபிவிருத்தி முன்னேற்றம் குறித்து ஆராயும் ஜனாதிபதி தலைமையிலான விசேட
கூட்டத் தொடரின் வரிசையில் நேற்று நுவரெலியா மாவட்ட விசேட அபிவிருத்திக் கூட்டம்
நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்ற நுவரெலியா மாவட்ட விசேட
அபிவிருத்திக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஆறுமுகம் தொண்டமான், சி. பி. ரத்நாயக்க,
நவீன் திசாநாயக்க, அனுர பிரியதர்ஷன யாப்பா, குமார வெல்கம, மத்திய மாகாண முதலமைச்சர்,
மாகாண ஆளுநர், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள்
மற்றும் சகல துறைகளையும் சார்ந்த உயர் அரச அதிகாரிகள் முக்கியஸ்தர்களும் கலந்து
கொண்டனர்.
மாவட்டத்தின் பல்வேறு குறைபாடுகள் காலந்தாழ்த்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள்,
கல்வித் துறையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள், மின்சாரம், சுகாதாரம் மற்றும் அரச
துறைகளில் நிலவும் பல்வேறு வெற்றிடங்கள் குறித்து அதிகாரிகள் ஜனாதிபதிக்கு
தெளிவுபடுத்தினர்.
உள்ளூராட்சிச் சபைகள், மாகாண சபை என பிரிந்து நின்று அபிவிருத்தித் திட்டங்களை
நிறைவு செய்ய முடியாது. மாகாண சபையும் அரசுதான். அரசாங்கமே அந்த அதிகாரிகளுக்கும்
சம்பளம் வழங்கு கின்றது.
அபிவிருத்தித் திட்டங்களை நடை முறைப்படுத்தும் போது மக்களை மனதில் கொண்டு சகல தரப்பு
அதிகாரிகளும் பகிர்ந்து வேலைகளை செய்தால் குறைகள் இடம்பெற வாய்ப்பில்லை என ஜனாதிபதி
தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் தற்போது வயதிற்கு ஏற்ப உயரமில்லாத சிறுவர்கள், இளையோரின்
தொகை அதிகரித்து வருகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் 100ற்கு 40 வீதமானோர்
வயதிற்கேற்ற வளர்ச்சி இல்லாமலுள்ளனர் என சுகாதாரத் துறை அதிகாரிகளினால் விடயம்
முன்வைக்கப்பட்டது.
இதற்கு பெருந்தோட்டங்களிலுள்ள மிகவும் குறைவான இடவசதி கொண்ட லயன் வீடுகளும்
அதற்குள்ளேயே குசினி அமைந்திருப்பதும் காரணம் என இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி பெருந்தோட்ட மக்கள் கோதுமை மாவை அதிகமாக பயன்படுத்துவதை
நிறுத்த வழிவகை செய்ய வேண்டும். குரக்கன் மற்றும் அரிசி மாவில் உற்பத்தி
செய்யப்படும் உணவுகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.
சிறுவர்களின் போஷாக்குக்கும், பெரியோரின் உடல் நலத்திற்கும் இது சிறந்த பதிலாக
அமையும் என தெரிவித்த ஜனாதிபதி, பெருந்தோட்டத்துறையினரே தற்போது கோதுமை மாவின்
பாவனையைக் கைவிடாமலுள்ளனர் எனவும், நூற்றிற்குப் பதினெட்டு வீதம் கோதுமை மா
இவர்களினாலேயே உபயோகப் படுத்தப் படுகிறது எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் மட்டுமன்றி தொழிற் சங்கப்
பிரதிநிதிகளும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும், மக்களுக்குச் சரியாக
தெளிவுபடுத்தும் விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி
தெரிவித்தார்.
அதேபோன்று பெருந்தோட்டத்துறையில் நிலவும் மதுப் பாவனைகளைக் கட்டுப்படுத்துவதற்கு
உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். அண்மையில் தம்மைச்
சந்தித்த மகளிர் அணியினர் இது குறித்து தமக்குத் தெரிவித்ததாகக் குறிப்பிட்ட
ஜனாதிபதி; பெருந்தோட்டப் பகுதிகளில் ‘கசிப்பு’ எனப்படும் வடி சாராயம் உற்பத்தி
பெருமளவில் இடம்பெறுவதாகவும், அங்குள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு இதுவே காரணமாய்
அமைவதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு இதனைத்
தடுக்கும் செயற்பாட்டை பொலிஸார் முன்னெடுக்க வேண்டுமென மாவட்டத்திற்குப் பொறுப்பான
பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பெரும்பாலான அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்தும்போது ஏற்பட்டுள்ள தொழில் சட்ட
உத்தி யோகத்தர்களின் பற்றாக்குறை சம்பந்தமாக இங்கு விடயங்கள் முன்வைக்கப்பட்டன.
இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி புதிதாக நியமனம் பெற்றுள்ள பட்டதாரிகளை தொழில்நுட்பத்
துறையில் பயிற்சியளித்து இதற்குத் தீர்வு காணுமாறு அதிகாரிகளைப் பணித்தார். (ஸ)