ஜெகன் மோகன் ரெட்டி பிணை மனுவைத் திரும்பப் பெற்றார்
ஜெகன் மோகன் ரெட்டி பிணை மனுவைத் திரும்பப் பெற்றார்
ஜெகன் மோகன் ரெட்டி பிணை மனுவைத் திரும்பப் பெற்றார்
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கு தொடர்பான ஓய். எஸ்.ஆர். காங்கிரஸ்
தலைவரும், கடப்பா தொகுதி எம்.பியுமான ஓய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி கடந்த மே மாதம்
27ம் திகதி கைது செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டி பிணை மனு தாக்கல் செய்தார், சி.பி.ஐ.யின் வாதத்தை
ஏற்றுக் கொண்ட ஆந்திர உயர்நீதிமன்றம் ஜுலை 4ம் திகதியன்று ஜெகன்மேகன் ரெட்டிக்கு
பிணை வழங்கவில்லை.
இதை எதிர்த்து ஜெகன்மோகன் ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக சி.பி.ஐ. இதுவரை எந்த ஆதாரத்தையும் தாக்கல்
செய்யாததால், ஆந்திர உயர் நீதிமன்றம் பிணை வழங்கும் சூழ்நிலை நிலவுவதால்,
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிணை மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறார் என்று
தகவல்கள் வெளியாகியுள்ளன.