சுதந்திர போராட்ட வீராங்கனை லக்ஷ்மி சேஹ்கல் நேற்றுக் காலை மாரடைப்பால் மரணமடைந்தார்.
அவ ருக்கு வயது 97.
உடல்நிலை பாதிக்கப்பட்ட லக்ஷ்மி சேஹ்கல் கடந்த வாரம் கான்பூர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையில் உடல் நிலையில் முன்னேற்றம்
ஏற்படா மலேயே அவர் நேற்றுக் காலை மரண மடைந்தார்.
இந்தியாவின் சுதந்திரப்
போராட்டத்தின் போது, சுபாஷ் சந்திர போஸின் இராணுவப் படையில் கப்டனாக பணியாற்றியவர்
லக்ஷ்மி சேஹ்கல், மருத்துவம் படித்து, நாட்டின் சுதந்திரத்துக்காக தன் வாழ்க்கையை
அர்ப்பணித்தவர் இவர். இவரை கெளரவிக்கும் வகையில் கடந்த 1998ம் ஆண்டு இவருக்கு பத்ம
விபூஷண் விருது வழங்கியது இந்திய அரசு.