![]()
|
||
விவாகரத்துக்கள் சமூகத்தின் நன்னெறிகளை சீர்குலைக்கின்றனவிவாகரத்துக்களும், விவாகரத்துக்கள் செய்து கொள்ளாமலே கணவனை மனைவியும், மனைவியைக் கணவனும் பிரிந்து மாற்றான் மனைவியுடன் அல்லது வேறு ஒரு பெண்ணுடன் அல்லது மனைவி வேறு ஒரு ஆடவனுடன் பல பெற்றோர் வாழும் தரம் குறைந்த நடத்தையினால்தான் சிறுபிள்ளைகள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் இலங்கை யில் தற்போது அதிகரித்து வருவதற்கான பிரதான காரணமாகும். விவாகரத்து என்ற சட்டபூர்வமான இந்தப் பதம் சமூகத்தின் கட்டமை ப்பை சீர்குலைப்பதுடன் கீழைத்தேய நாடுகளில் தொன்றுதொட்டு நிலைத்திருக்கும் குடும்ப நன்நெறிகளை முற்றாக அழித்துவிடக் கூடியதாக அமைந்துள்ளது. பாரம்பரியமாக நிலைகொண்டிருக்கும் கூட்டுக்குடும்ப அமைப்பு பல நூற்றாண்டுகளாக இலங்கை உட்பட கீழைத்தேய நாடுகளில் வலுப் பெற்றிருந்தது. இந்தக் கூட்டுக்குடும்பங்களுக்கு ஒருவர் குடும்பத் தலைவராக இருப்பார். அவர் பெரும்பாலும் குடும்பத்தில் வயதில் முதிர்ச்சி அடைந்த நடமாடி பணி செய்யக்கூடிய வலுவான உடற் கட்டைக் கொண்ட பாட்டனாராகவோ, அப்பாவாகவோ, பெரியப் பாவாகவோ அல்லது மாமனாராகவோ இருப்பார். இந்தக் கூட்டுக் குடும்பத்தில் மணம் முடித்த ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளை களும் தங்கள் பிள்ளைகளுடன் ஒற்றுமையாக வாழ்ந்து வருவார்கள். குடும்பத் தலைவரே குடும்பத்துக்குக் கிடைக்கும் வருமானத்தை தனது மனைவி மூலமாக அல்லது குடும்பத்தில் உள்ள ஒரு முக் கிய அங்கத்தவரின் ஊடாக சிக்கனமாகச் செலவிட்டு குடும்பத் தின் செல்வாக்கையும், பெருமையையும் வளர்ப்பதற்கு வழிவகுப் பார். இந்தக் குடும்பத் தலைவரே குடும்பத்தில் ஏற்படக்கூடிய சிறு கருத்து மோதல்கள் தகராறுகளை சுமுகமாகத் தீர்த்துவைப்பார். குடும்பத்தின் கட்டுக்கோப்பையும், ஒற்றுமையையும் வலுப்படுத்தக் கூடிய வகையில் அக்காலத்தில் நடந்து கொண்டார்கள். ஆயினும் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த கூட்டுக் குடும்ப அமைப்புக்கள் நாகரீகம் வளர்ச்சியடைய வலுவிழந்தது. ஒரு நாடு அபிவிருத்தி அடையும் போது, அந்த நாட்டில் புதிய நகரங்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. அதனால் கிராமங்களில் வாழ்ந்த மக்கள் தங்கள் உற்றார், உறவினர் முதாதையரைப் பிரிந்து நகரங் களில் தங்கள் மனைவி மக்களுடன் தனிக்குடித்தனம் நடத்தும் புதிய நடைமுறையைக் கையாண்டார்கள். இதனால் கூட்டுக் குடும்ப அமைப்புகள் படிப்படியாக செயலிழக்க ஆரம்பித்தன. இன்றும் கூட இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், மலேசியா போன்ற பல நாடுகளின் கிராமங்களில் கூட்டுக் குடும்பங்கள் சீரான முறையில் இருந்து வருகின்றன. பண்டைய காலத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவம் கையா ளப்பட்டு வந்தது. அதனால் கணவன் மனைவியையோ, மனைவி கணவனையோ மரணிக்கும் வரை பிரிவதில்லை. இந்த நற்பண்பை தங்களின் முன்மாதிரியான நடத்தையினால் பெற்றோர் அன்று தங் கள் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்தார்கள். பல பிள்ளைகளை உடைய ஒரு குடும்பத்தில் தாய் மரணித்துவிட்டால், அந்தப் பிள்ளைகளை வளர்த்து பெரியவர்களாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக கணவன் மறுமணம் புரிவதற்கு அன்றைய சமூகம் அங்கீகாரம் அளித்தது. ஆயினும் கணவனை இழந்த ஒரு பெண் மறுமனம் செய்வதற்கு அன்றைய சமூகம் அனுமதிக்காத போதிலும், அந்த கைம்பெண் தன் பிள்ளைகளை நன்றாக வளர்ப் பதற்கு கூட்டுக் குடும்பத்தில் உள்ள ஏனையோர் தங்கள் பூரண ஒத்துழைப்பை அளிப்பார்கள். இன்று தனிக் குடித்தனம் என்ற பெயரில் குடும்பங்கள் தனித்து வாழ்வதால்தான் விவாகரத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால்தான் அந்தக் குடும்பங்களின் பிள்ளைகள் சீர்குலைந்து கல்வி அறிவை இழந்து தெருக்களில் அலைந்து திரிந்து பிச்சை எடுத்தும் பின்னர் படிப்படியாக குற்றச் செயல்களில் ஈடுபட வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள். வெளிநாடுகளுக்கு இலட்சக்கணக்கான பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையுடன் செல்லும் கணவன்மார்கள் மற்றும் மனைவி மாரின் பல குடும்பங்களும் இவ்விதம் விவாகரத்து அல்லது பிரிந்து வாழும் பழக்கத்தைக் கடைப்பிடிப்பதனால் அவர்களின் பிள்ளைகள் எதிர்காலத்தில் நடைப்பிணங்களாக வாழ்க்கையை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள். குடும்பங்கள் விவகாரத்தில் பிரிவதை தடுக்கும் பெரும் பொறுப்பு சமூகத் தலைவர்களுக்கு இருக்கின்றது. சமூகத் தலைவர்கள் குடும்பங்களில் தோன்றும் பிரச்சினைகளை இரு சாராரும் விட்டுக் கொடுக்கக்கூடிய வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்த்து வைக்க வேண்டும். இலங்கையில் சகல மதங்களும் தழைத்தோங்கி வருகின்றன. எங்கள் நாட்டில் தார்மீக சமுதாயம் ஒன்றை அமைப்பதற்கு மதங்கள் மக்க ளுக்கு ஒரு மகத்தான உந்துசக்தியாக விளங்குகின்றன. நாட்டு மக்களின் பலர் நாளாந்தம் இறைவழிபாடுகளில் ஈடுபடுகின்றார்கள். இந்த ஆன்மீக செயற்பாடுகள் மக்களை நல்வழிப்படுத்தவே உதவு கின்றன. இதே வழியில் பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கும் இறைவனின் மீது நம்பிக்கை வைக்கக்கூடிய வகையில் அவர்களின் நாளாந்த வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கு உதவ வேண்டும். அதன் மூலமே எங்கள் சமூகத்தில் நற்பண்புகள் தழைத்தோங்கும். |
||
|
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். webmanager@lakehouse.lk |