AgBiz 2012 விருது வழங்கும் விழாவில் 14 விருதுகளை வென்று ஹேலீஸ் சாதனை
AgBiz 2012 விருது வழங்கும் விழாவில் 14 விருதுகளை வென்று ஹேலீஸ் சாதனை
AgBiz 2012 விருது வழங்கும் விழாவில்
14 விருதுகளை வென்று ஹேலீஸ் சாதனை
இலங்கையின் விவசாயத் துறையில் மிக ஆழமாக வேரூன்றி, ஈடுபாட்டுடன் பணியாற்றி வரும்
ஹேலீஸ் குழுமம் கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற 2012 இன் தேசிய விவசாய விருது
AgBiz 2012 விழாவில் 14 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.
ஹேலீஸ் விவசாயப் பிரிவின் கீழ் வரும் ஒன்பது கம்பனிகளுள் ஏழு கம்பனிகளுக்கு
விருதுகள் வழங்கப்பட்டன. முடிவடைந்த நிதி ஆண்டில் நாட்டின் விவசாயத்துறைக்கு
வழங்கிய பங்களிப்புக்காக 06 தங்கம் 3 வெள்ளி மற்றும் 4 வெண்கல விருதுகள் இந்தக்
கம்பனிகளுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டன. அத்தோடு விவசாயத் துறைக்கான தேசியப்
பங்களிப்புக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தேசிய விருதினை ஹேலீஸ்
அக்கிறிகல்ச்சர் முகாமைப் பணிப்பாளர் றிஸ்வி ஷஹீட்டுக்கு வழங்குகிறார்.
தேசிய அக்கிறிபிஸினஸ் கவுன்சிலின் தலைவர் அருண வீரக்கோன், செயலாளர் றோஹித
நாணயக்கார ஆகியோரும் படத்தில் காணப்படுகின்றனர்.
“மீண்டும் ஒரு தடவை தேசிய விருது வழங்கும் விழாவில் நாம் ஜொலித்துள்ளோம்” என்று
கூறினார் ஹேலீஸ் குழுமத்தின் விவசாயப் பிரிவு கம்பனிகளுக்குப் பொறுப்பான ஹேலீஸ்
குழுமத்தின் பணிப்பாளர் றிஸ்வி சஹீட்.
“இந்த தேசிய மட்ட விழாவில் தொடர்ந்து ஹேலீஸ்
கம்பனிகள் பெற்று வரும் விருதுகளின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்து
வருகின்றமையானது, விவசாயத் துறையில் கம்பனியின் ஈடுபாடானது வெறுமனே நிலைத்து
நிற்கும் ஒன்று மட்டுமல்ல மாறாக அது வளர்ச்சியும் கண்டு வருகின்றது என்பதற்கு ஒரு
சான்றாகும்” என்று அவர் மேலும் கூறினார்.
2012 விருது வழங்கும் விழாவில் ஹேலீஸ் எக்ரி கல்ச்சர் ஹோல்டிங்ஸ் லிமிட்டட், (முன்னாள்
ஹேலீஸ் அக்ரோ புரடக்ட்ஸ் லிமிட்டெட்) பண்ணை இயந்திரங்கள், கருவிகளின் மற்றும்
உபகரணங்கள், கால்நடை பராமரிப்பு உற்பத்திகள் என்பனவற்றின் இறக்குமதி மற்றும்
விநியோகம் என்பனவற்றுக்காக மூன்று தங்க விருதுகளையும், விவசாய இரசாயனங்களுக்காக
வெள்ளி விருதையும், விதைகள் இறக்குமதிக்காக வெண்கல விருதையும் வென்றது. இவை
அனைத்தும் பாரிய பிரிவுகளில் வெல்லப்பட்டுள்ளன.
சன்புரொஸ்ட் லிமிட்டெட் நிறுவனம் (விரிவாக்கல் சேவை - பாரிய பிரிவு) HJS
கொன்டிமன்ட்ஸ் லிமிட்டட் (பழவகை மற்றும் மரக்கறி ஏற்றுமதி சந்தைப்படுத்தல் - பாரிய
பிரிவு) குவாலிட்டி சீட் கம்பனி லிமிட்டெட் (பண்ணை விதைகள் - சிறிய பிரிவு)
ஆகியவற்றில் தங்கப் பதக்கங்களை வென்றன.
விருது பெற்ற ஹேலீஸ் அக்கிரிகல்ச்சர் குழுமத்தை காண்க.
எக்ரோ டெக்னிகா லிமிட்டட் வெள்ளி விருதை வென்றது (பண்ணை இயந்திரங்கள், உபகரணங்கள்
மற்றும் கருவிகள் விரிவாக்கம்) பாரிய உற்பத்தி பிரிவில் இந்த விருது வெல்லப்பட்டது.
ஹேலீஸ் அக்ரோ பயோ டெக் லிமிட்டெட் சில்லறை / மொத்த சந்தைப்படுத்தல் சிறிய பிரிவில்
குவாலிட்டி சீட் கம்பனி லமிட்டட் நாற்று மேடைகள் உற்பத்தி, சிறிய பிரிவில் மலர்
பண்ணைகள் ஆகிய பிரிவுகளில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றது. ஹேலீஸ் எக்ரோ பாம்ஸ்
லிமிட்டட் (பண்ணை விதை) மத்திய பிரிவில் உற்பத்தியாளர் என்ற ரீதியில் வெண்கல விருதை
வென்றது.
பழங்கள் மற்றும் மரக்கறிகளின் ஏற்றுமதிப் பிரிவில் HJS கொண்டிமன்ட்ஸ் நிறுவனம்
தேசிய மட்ட விருதில் இரண்டாம் இடத்தை வென்றது.
இம்முறை வெல்லப்பட்ட 14 விருதுகள் மூலம் கடந்த நான்கு வருடங்களில் தேசிய விவசாய
விருது வழங்கும் விழாவில் ஹேலீஸ் குழுமம் வென்றுள்ள விருதுகளின் எண்ணிக்கை 35 ஆகும்.
இவற்றுள் 16 தங்க விருதுகளாகும். இவ்வாண்டும் ஏழாவது தடவையாக தேசிய விவசாய வர்த்தக
சபை இந்த விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்திருந்தது.
ஹேலீஸ் அக்ரிகல்ச்சர் குழுமத்தில் ஹேலீஸ் அக்ரோ பேர்டிலைஸர்ஸ் லிமிட்டெட், ஹெகெம்
விமிட்டட், அக்ரோ டெக்னிகா லிமிட்டட், ஹேலீஸ் அக்ரோ பயோ டெக் மிலிட்டெட்,
சன்புரொஸ்ட் லிமிட்டட், HJS கொண்டிமன்ட்ஸ் லிமிட்டெட், ஹேலீஸ் அக்ரோ பாம்ஸ்
லிமிட்டெட், குவாலிட்டி சீட் கம்பனி லிமிட்டெட் என்பன அங்கம் வகிக்கின்றன. நாட்டின்
விவசாய உற்பத்திப் பிரிவில் ஹேலீஸ் குழுமத்தின் தொடரான ஈடுபாட்டையும் இவை
கொண்டுள்ளன.
விவசாயிகளின் வாழ்க்கை மற்றும் வர்த்தகம் அவர்களின் பெரும்பாலான
உற்பத்திகளின் ஆயுள் சுற்றில் அவற்றின் சந்தைப்படுத்தல் விநியோகம் என ஒவ்வொரு
கட்டத்திலும் இவை பங்களிப்பை நல்கி வருகின்றன. இலங்கையின் பயிர் விளை நிலங்களில்
உற்பத்தி செய்யப்படும் விளை பொருட்கள் உலகளாவிய சந்தையை நுகர் பொருளாக சென்றடையவும்
இந்த நிறுவனங்கள் உறுதுணையாக உள்ளன. இவற்றின் காரணமாகவே ஹேலீஸ் விவசாயப் பிரிவுக்கு
உள்ளூர் விவசாய சமூகத்தின் மத்தியில் பிரத்தியேகமான ஒரு இடம் உள்ளது.