ஜோர்ஜ் ஸ்டுவர்ட்ஸ் ஏnஜன்ஸீஸ் நிறுவனம் இலங்கையில் GS Health எனும் பெயரில்
மீண்டும் உதயம்
ஜோர்ஜ் ஸ்டுவர்ட்ஸ் ஏnஜன்ஸீஸ் நிறுவனம்
இலங்கையில் GS Health எனும் பெயரில் மீண்டும் உதயம்
ஜோர்ஜ் ஸ்டுவட்ஸ் ஏஜென்சிஸ் பிறைவெற் லிமிடெட் நிறுவனம், ஜோர்ஜ் ஸ்டுவட்ஸ் ஹெல்த்
பிறைவெற் லிமிடெட் என மீண்டும் உத்தியோகபூர்வமாக அறிமுகமாவது தொடர்பில் இன்று
அறிவித்தது. இப்புதிய கம்பனி நாட்டின் முதல்தர சுகாதரப் பராமரிப்பு சேவை வழங்குநராக
மாறும் நோக்குடன் அதன் புதிய, நவீன தொழில்முயற்சியின் ஒரு பகுதியாக அதன் முன்னாள்
மருந்தாக்கல் மற்றும் மருந்து வழங்குநர் நிறுவனத்தைக் கூட்டிணைப்புச் செய்கின்றது.
டிலித் ஜெயவீர, தலைவர்
ஜோர்ஜ் ஸ்டுவட்ஸ் கம்பனிக்கு முற்றிலும் சொந்தமான துணை நிறுவனமாக 1975 ம் ஆண்டில்
கூட்டிணைப்புச் செய்யப்பட்ட ஜோர்ஜ் ஸ்டுவட்ஸ் ஏஜென்kஸ் லிமிடெட் நுகர்வோர்
பொருட்களின் ஓர் சந்தைப்படுத்துநராகத் காணப்பட்டதுடன், நோயறி மருந்துப் பொருட்கள்,
பரிந்துரைக்கப்படாத உற்பத்திப் பொருட்கள் என்பனவற்றின் ஏற்றுமதி, விளம்பர மேம்பாடு,
விநியோகம் போன்ற வர்த்தகத் துறைகளினுள் அதன் செயற்பாடுகளை விரைவாக விரிவுபடுத்தியது.
அத்துடன், மருந்தாக்கல் மற்றும் ஊட்டச் சத்துமிக்க உற்பத்திப் பொருட்களின்
சந்தைப்படுத்தல், விநியோகித்தல் எனவும் அதன் வர்த்தக முயற்சிகளை விரிவுபடுத்தியது.
21 ம் நூற்றாண்டளவில் இலங்கையர்கள் அனைவரினதும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்
சுகாதாரப் பராமரிப்பு உற்பத்திப் பொருட்களை வழங்கும் வகையில் மருந்தாக்கல் மற்றும்
ஊட்டச் சத்துப் பொருட்கள் அதன் பிரதான வியாபாரமாக மாறியது. அத்துடன், இந்நிறுவனம்
பல்தேசிய பெருநிறுவனங்களுடன் போட்டியிட்டு 10 தனியார் துறை மருந்துப் பொருள்
இறக்குமதியாளர்களில் ஒன்று என தரங் குறிக்கப்பட்டது.
“மனித ஆரோக்கியத்திறகு உதவக் கூடிய உற்பத்திப் பொருட்களை மாத்திரமன்றி சேவைகளையும்
விருத்தி செய்து, உற்பத்தி செய்து, சந்தைப்படுத்துவதற்கு ஜோர்ஜ் ஸ்டுவட்ஸ் ஹெல்த்
நிறுவனம் அர்ப்பணிப்புடன் திகழ்கின்றது என அறிவிப்பதில் இன்று நாம்
பெருமையடைகின்றோம்” என ஜோர்ஜ் ஸ்டுவட்ஸ் ஹெல்த் நிறுவனத்தின் நிறைவேற்றுப்
பணிப்பாளர் திரு. எரந்தஜித் ரணசிங்க தெரிவித்தார்.
ஜோர்ஜ் ஸ்டுவட்ஸ் ஹெல்த்,
இந்நாட்டின் மிகுந்த அங்கீகாரம் பெற்றதும், மதிப்புமிக்கதுமான சில கம்பனிகளின் வலிமை
மிக்க சக்திகள் ஒன்று சேர்ந்து வியாபித்துக் காணப்படும் ஜோர்ஜ் ஸ்டுவட்ஸ் அன்ட்
கம்பனியின் பல தரப்பட்ட குழும நிதி, பொருள் மற்றும் தார்மீக ஆதரவைக்
கொண்டிருக்கின்றது.
ஏரந்தஜித் ரணசிங்க, நிறைவேற்று பணிப்பாளர்
ஜோர்ஜ் ஸ்டுவட்ஸ் குழுமம் தேயிலை ஏற்றுமதி, வணிகம், விமானப்
பயணச் சீட்டுகள், விமான நிறுவனங்களின் பொதுவான விற்பனை முகவர், உள்ளக மற்றும்
வெளியகச் சுற்றுலாக்கள், கல்வி மற்றும் நிதி சேவைகள் போன்ற பல்வேறு உபாயரீதியான
வர்த்தகச் செயற்பாடுகளில் செயலூக்கத்துடன் ஈடுபட்டுள்ளது. அத்துடன், இன்று உள்ளூரில்
புத்தாக்கம், வளர்ச்சி என்பவற்றை ஏற்படுத்தக்கூடிய ஒருங்கிணைந்த விசேட மருந்துப்
பொருட்கள், சுகாதாரப் பராமரிப்பு வணிகத்தை உருவாக்குகின்றது.
“மருந்துப் பொருட்கள்
வழங்குநர் என்ற சாதாரண நிலையிலிருந்து, எமது மக்களின் சேமநலனுக்கான முதல்தர
சுகாதாரப் பராமரிப்பு சேவைகள் வழங்கும் மிகப் பெரும் செயற்பணிக்கு நகரும் நாம்,
ஜோர்ஜ் ஸ்டவர்ட்ஸின் பிரிவுகளில் மிகவும் சிக்கலானதும், முக்கியமானதுமான துறைகளில்
ஒன்றாக இத்தொழில் முயற்சியைக் கருதுகின்றோம்.
நாடு முழுவதுமுள்ள பல இலட்சக் கணக்கான
மக்கள் சிறந்த வாழ்வை முன்னெடுப்பதற்கு நாம் பெரும் முயற்சி மேற்கொள்கின்ற
காரணத்தினால், மருத்துவ முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான பாதையில் தொடர்ந்து
தொழிற்படுவோம்” எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், நிறைவேறாத தேவைகள், நலன் என்பவனவற்றை நிறைவேற்றுவதற்கான அர்த்தமுள்ள புதிய
சிகிச்சைத் தெரிவுகளை விருத்தி செய்யும் நோக்கில் இசைவாக்கமடைந்த, உறுதியான உற்பத்தி
மற்றும் சேவை முறைமை ஒன்றை இந்நிறுவனம் கொண்டிருக்கின்றது என இக்கம்பனி அறிவித்தது.
தேசத்தின் ஆரோக்கியம், நலம் என்பவனற்றுக்கான உயிர்ப்பான தீர்வுகளை அறிமுகஞ் செய்வதன்
மூலம் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் ஓர் ஊக்கியாகத் தொழிற்படுவதற்கான வசதி
வாய்ப்புகளை தேடும் மிகப் பெரும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம்
இந்நிறுவனத்திடம் காணப்படுகின்றது.
“நாம் வாழ்க்கையை மேம்படுத்தும் குறிக்கோளுடன்
மிகச் சிறந்த மருத்துவத் தீர்வுகளை வழங்குவதன் மூலம் தேகாரோக்கியம் மிக்கதும்,
மகிழ்ச்சி நிறைந்ததுமான தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான உறுதிமொழியை வழங்குகின்றோம்.
அத்துடன், இத்தொலைநோக்குடன் எங்களுடன் இணைந்து அதனை எம்முடன் பகிர்ந்து கொள்வதுடன்,
நலமான வாழ்க்கை வாழ ஆரம்பிக்குமாறும் உங்களுக்கு நாம் அழைப்பு விடுகின்றோம்” என அவர்
மேலும் தெரிவித்தார். அத்துடன் ‘நலமாக வாழுங்கள்’ என்பதே புதிய ஜோர்ஜ் ஸ்டுவர்ட்ஸ்
ஹெல்த் கம்பனியின் புதிய மெய்யியல் கேட்பாடாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது ஜோர்ஜ் ஸ்டுவர்ட்ஸ் ஹெலத் கம்பனி மலிவான விலை வரிசைகளின் கீழ் அனைத்து
இலங்கையர்க ளுக்கும் உயர் தரமிக்க மருந்துப் பொருட்களை வழங்கக் கூடிய நிலையில்
இருக்கும் உலகிலுள்ள சர்வதேச திறன்மிக்க மருந்தாக்கல் உற்பத்தியாளர்களின் நிலையை
அடைந்திருக்கின்றது.
ஜோர்ஜ் ஸ்டுவர்ட்ஸ் ஹெல்த் அவர்களது புதிய தொலைநோக்குடன் எதிர்காலத்தில் அறிமுகஞ்
செய்யப்படவுள்ள மேலும் அதிகமான புதிய முயற்சிகளுக்கான திட்டங்களுடன் சுகாதாரப்
பராமரிப்புத் துறையை அடுத்த மட்டத்திற்கு முன்னெடுப்பதற்கான அதன் பங்களிப்பினை
மேற்கொள்வதற்கு இப்போது தயாராகவே உள்ளது.