அடொல்ப் ஹிட்லர் காலத்து 97 வயது முக்கிய யுத்த குற்றவாளி ஒருவர் ஹங்கேரி நாட்டில்
கைது செய்யப்பட்டுள்ளார்.
பல தசாப்தங்களாக தேடப்பட்டு வந்த க்சிசிக் சதடி என்ற
நாசிக் காலத்து சிலோவாக்கிய நாட்டு பொலிஸ் பிரதானியே கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 15, 700 யூதர்களை ஹிட்லரின் வதை முகாம்களுக்கு நாடுகடத்தியதாக இவர் மீது
குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 1948 ஆம் ஆண்டு சதடி மீது மரண தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தனது
அடையாளத்தை மாற்றி கனடாவுக்கு தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 1997 ஆம்
ஆண்டு இவரது உண்மையான அடையாளம் தெரிய வந்தபோது கடந்த 15 ஆண்டுகளாக தேடப்பட்டு
வந்தார்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை ஹங்கேரி தலைநகரில் வைத்து சதடி கைது செய்யப்பட்டார்.
இவர் சிறந்த தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக அரச தரப்பு வழக்கறிஞர்
குறிப்பிட்டுள்ளார்.