ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் மாதம் பிறை 27
நந்தன வருடம் ஆடி மாதம் 03ம் திகதி புதன்கிழமை
THURSDAY ,JULY, 19, 2012
வரு. 80 இல. 170
 

வடகொரிய தலைவருக்கு மார்ஷல் பட்டம்

வடகொரிய தலைவருக்கு மார்ஷல் பட்டம்

வட கொரியாவின் புதிய தலைவர் கிம் ஜொங் உன் தம்மை மார்ஷலாக பட்டம் சூட்டிக் கொண்டுள்ளார். இதனை அந்நாட்டு அரச ஊடகம் அறிவித்துள்ளது.

வட கொரிய இராணுவத்தில் மாற்றம் கொண்டு வந்து இரு தினங்களுக்குள் இராணுவத்தின் உயர் பட்டமான மார்ஷல் பட்டத்தை சூட்டிக் கொண்டுள்ளார்.

இதன் மூலம் அவர் இராணுவத்தை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கிம் ஜொங் உன் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக வடகொரிய இராணுவ தளபதி ரியொங் ஹொ, சுகவீனம் காரணமாக முழுமையாக பதவி நீக்கப்பட்டு இராணுவ ஜெனரல் ஹியொன் யொங் சொல் வைஸ் மார்ஷலாக நியமிக்கப்பட்டார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி