ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் மாதம் பிறை 27
நந்தன வருடம் ஆடி மாதம் 03ம் திகதி புதன்கிழமை
THURSDAY ,JULY, 19, 2012
வரு. 80 இல. 170
 

மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் திறமை காட்டிய மாணவர்கள் கெளரவிப்பு

மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் திறமை காட்டிய மாணவர்கள் கெளரவிப்பு

கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கிடையிலான மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் திறமை காட்டி தேசிய மட்ட விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர்கள் பதக்கம் அணிவிக்கப்பட்டு பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.

இக் கெளரவிப்பு நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை (17/7/2012) கல்லூரியின் அதாவுல்லா கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டியில் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவன் ஆர். முகமட் அஸியான் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 1ம் இடத்தை பெற்றார்.

ஏறுக்ஸான் என்ற மாணவன் 19 வயதுக்குட்பட்ட 100 மீற்றர், 200 மீற்றர் ஓட்ட போட்டிகளில் மூன்றாம் இடத்தை பெற்று தேசிய மட்ட போட்டியில் கலந்து கொள்வதற்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதேபோன்று கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கிடையிலான மாகாண மட்ட பெரு விளையாட்டு போட்டியின் மேசைபந்து போட்டியிலும் 3ம் இடத்தை பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேசைபந்து போட்டியில் கலந்து வெற்றி பெற்ற ஆறு மாணவர்களும் உட்பட எட்டு மாணவர்கள் பதக்கம் அணிவிக்கப்பட்டு பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி