ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் மாதம் பிறை 27
நந்தன வருடம் ஆடி மாதம் 03ம் திகதி புதன்கிழமை
THURSDAY ,JULY, 19, 2012
வரு. 80 இல. 170
 

மாணவன் கெளரவிப்பு

மாணவன் கெளரவிப்பு
 

கிழக்கு மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலய மாணவன் எம்.எப்.பைசான் 11 வயதிற்குட்பட்ட 75 மீற்றர், 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் வெற்றிபெற்றமைக்காக பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு அதிபர் எம்.ஏ. அன்சார் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். இப்றாஹிம், அட்டாளைச்சேனை விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனத் தலைவர் ஹம்சா சனூஸ் உட்பட பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் கலந்து கொண்டு மாணவனைப் பாராட்டினர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி