தொண்டமான் விளையாட்டு அரங்கில் பெட்மின்டன், ஜிம் பகுதி இன்று திறப்பு
தொண்டமான் விளையாட்டு அரங்கில் பெட்மின்டன்,
ஜிம் பகுதி இன்று திறப்பு
நோர்வூட் தினகரன் நிருபர்
மலையக விளையாட்டரங்கு வீரர்களை ஊக்குவிக்கும் முகமாக அமரர் செளமிய மூர்த்தி
தொண்டமான் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, கால் நடை அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை
தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானின் தலைமையின் கீழ்
இயங்கும் "தொண்டமான் விளையாட்டு அரங்கு" முதல் கட்டமாக பெட்மின்டன் மற்றும் ஜிம்
ஆகிய பிரிவுகள் உத்தியோகபூர்வமாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானால் வியாழக்கிழமை இன்று
திறந்து வைக்கப்பட உள்ளது.
பெட்மின்டன் விளையாட்டு பகுதியானது சர்வதேச விளையாட்டு விதிமுறைகளுக்கு அமைய பகல்
இரவு உள்ளக அரங்காக மின்னொளி அரங்காக அமைக்கப்பட்டுள்ளது. இதன் விசேட அம்சமாகும்.
இதே போன்று ஜிம் பகுதியும் அதி நவீன இயந்திரங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாக கெளரவ
அமைச்சரின் விளையாட்டு இணைப்பதிகாரியும், நோர்வூட் தொண்டமான் விளையாட்டு அரங்கு
பொறுப்பாளருமான ஜி.கிருஷ்ண மூர்த்தி தெரிவித்தார்.