இலங்கை கிரிக்கெட் வீரர்களின் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கை கிரிக்கெட் வீரர்களின் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து
புதிய ஆண்டுக்கான தேசிய ஒப்பந்தம் தொடர்பாக இலங்கைக் கிரிக்கெட்டிற்கும் இலங்கை
கிரிக்கெட் வீரர்களுக்குமிடையில் இடம்பெற்றுவந்த இழுபறி நிலை முடிவுக்கு வந்துள்ளது.
இதன்படி மார்ச் 2012 ம் ஆண்டு முதல் அமுலுக்கு வரும் வகையிலான புதிய ஒப்பந்தமொன்று
கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் ஏற்கனவே கடந்த பெப்ரவரியுடன் நிறைவு பெற்றிருந்த நிலையில் புதிய ஒப்பந்தம்
தொடர்பாகத் தொடர்ந்தும் தாமதம் நிலவி வந்திருந்தது.
இலங்கைக் கிரிக்கெட் சபை பிரேரித்த ஒப்பந்த அம்சங்களுக்கும் இலங்கை கிரிக்கெட்
வீரர்களின் எதிர்பார்ப்பிற்குமிடையில் இடைவெளி காணப்பட்டதோடு சில அம்சங்கள்
தொடர்பாக இலங்கை வீரர்கள் எதிர்ப்புத் தெரிவித்துவந்தனர்.
இதில் வீரர்கள் ஊடகங்களுக்குத் கருத்துத் தெரிவிக்க முன்னர் இலங்கைக் கிரிக்கெட்
சபையிடம் அனுமதி பெற் றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்து இலங்கைக் கிரிக்கெட்
வீரர்களால் கடுமையான எதிர்ப்புக்குள்ளாக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த அம்சத்தை
உள்ளடக்காமல் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா
பிaமியர் லீக் தொடரின் அறிமுக விழாவில் கலந்து கொண்ட இலங்கை அணியின் தலைவரான மஹேல
ஜெயவர்தன இலங்கைத் தேசிய ஒப்பந்தம் தொடர்பான முடிவு பெறப்படாமல் எஸ்.எல்.பி.எல்.
போட்டிகளில் கைச்சாத்திட முடியாது எனவும், எஸ்.எல்.பி.எல். போட்டிகளில் பங்குபற்ற
முடியாது எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே தற்போது ஒப்பந்தம் தொடர்பான சமரச நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கைக் கிரிக்கெட் வீரர்களுக்குக் கடந்த 4 மாதங்களாக வழங்கப்படாத ஊதியங்களை
உள்ளடக்கியவாறு இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே 4 மாதகால ஊதியம் உடனடியாக வீரர்களுக்கு வழங்கப் படுவதற்கான சாத்தியங்கள் இல்
லாமற்போயுள்ளது.
எதிர்வரும் 21ம் திகதி இந்திய அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி
இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு முன்னரே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுவிடும் எனத்
தெரிவித்த இலங்கைக் கிரிக்கெட்டின் செயலாளர் நிஷாந்த ரணதுங்க ஒப் பந்தம் குறித்து
கிரிக்கெட் வீரர்களும் சம்மதம் தெரிவித்துள்ளதை உறுதிப் படுத்தினார்.