கொழும்பு முகத்துவாரம் புனித சந்தியாகப்பர் திருவிழா
கொழும்பு முகத்துவாரம் புனித சந்தியாகப்பர் திருவிழா
கொழும்பு முகத்துவாரம்
புனித சந்தியாகப்பர் திருவிழா
கொழும்பு முகத்துவாரம் புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா எதிர்வரும் 29 ஆம் திகதி
வெகு விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது.
நேற்றைய தினம் 18 ஆம் திகதி மாலை 5.00 மணி திருப்பலியையடுத்து கொடியேற்றம்
இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து தினமும் நவநாள் ஆராதனைகள் மாலை 6.30 மணிக்கு
நடைபெறவுள்ளன.
இன்று 19 ஆம் திகதி இறந்த ஆன்மாக்களுக்கான திருப்பலியும் 21 ஆம் திகதி முதல்
நன்மைத் திருப்பலியும் நோயாளிகளுக்கான திருப்பலியும் இடம்பெறவுள்ளன.
28 ஆம் திகதி வெஸ்பிர்ஸ் மாலை அராதனை நடைபெறுவதுடன் 29 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு
திருநாள் சிறப்புத் திருப்பலி அருட் தந்தை அந்தனி பெர்னாண்டோபுள்ளே அடிகளாரின்
தலைமையில் நிறைவேற்றப்படும். (ஸ)