கொழும்பு செக்கட்டித்தெரு புனித அன்னம்மாள் ஆலய வருடாந்த திருவிழா நாளை
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
நாளை தொடக்கம் 27 ஆம் திகதி வரை தினமும் நவநாள் ஆராதனையும் திருப்பலியும் மாலை 6.15
மணிக்கு நடைபெறவுள்ளன.
28 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 7.00 மணிக்கு மாலை ஆராதனையும் 29 ஆம் திகதி
ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்குத் திருவிழா சிறப்புத் திருப்பலியும்
நிறைவேற்றப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து அன்னையின் திருச்சுரூபப் பவனியும் திவ்விய
நற்கருணை ஆசீர்வாதமும் இடம்பெறும். (ஸ)