ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் மாதம் பிறை 27
நந்தன வருடம் ஆடி மாதம் 03ம் திகதி புதன்கிழமை
THURSDAY, JULY,19, 2012

Print

 
கதிர்காம கந்தன் இன்று கொடியேற்றம்

கதிர்காம கந்தன் இன்று கொடியேற்றம்
 

புனித கதிர்காமக் கந்தன் வருடாந்த உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. இதனையொட்டிய எசல பெரஹர வைபவமும் இன்றிலிருந்து ஆரம் பமாகிறது.

இந்த உற்சவத்தில் கலந்துகொள் வதற்கென வடக்கு, கிழக்கிலிருந்து பாதயாத்திரையாக உகந்தை ஊடாக வருகை தந்த 2500 இற்கு மேற்பட்டோர் கதிர்காம கோயிலை வந்தடைந்துள்ளதோடு நாட்டில் சமாதான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து இலட்சக் கணக்கான பக்தர்கள் வருகை தருவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

பெரஹரா செல்லும் வீதிகள் வர்ண மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்டு வீதிகள் செப்பனிடப்பட்டு பெளத்த கொடிகள் பறந்த வண்ணம் காட்சிய ளிக்கின்றன. பிரதான தீ மிதிப்பு வைபவம் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளதோடு ரன்தோலி இறுதிப் பெரஹரா இறுதிப் பெரஹரா 01ஆம் திகதி வீதி உலாவரவுள்ளதோடு தீர்த்தோற்சவம் 02 ஆம் திகதி இடம்பெறும் இந்நிகழ்வுகளில் தென் இந்திய பக்தர்களும் வருகை தந்து கலந்துகொள்வதும் விசேட அம்சமாகும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

webmanager@lakehouse.lk