புனித கதிர்காமக் கந்தன் வருடாந்த உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
இதனையொட்டிய எசல பெரஹர வைபவமும் இன்றிலிருந்து ஆரம் பமாகிறது.
இந்த உற்சவத்தில் கலந்துகொள் வதற்கென வடக்கு, கிழக்கிலிருந்து பாதயாத்திரையாக உகந்தை
ஊடாக வருகை தந்த 2500 இற்கு மேற்பட்டோர் கதிர்காம கோயிலை வந்தடைந்துள்ளதோடு நாட்டில்
சமாதான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து இலட்சக் கணக்கான பக்தர்கள் வருகை
தருவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.
பெரஹரா செல்லும் வீதிகள் வர்ண மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்டு வீதிகள்
செப்பனிடப்பட்டு பெளத்த கொடிகள் பறந்த வண்ணம் காட்சிய ளிக்கின்றன. பிரதான தீ
மிதிப்பு வைபவம் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளதோடு ரன்தோலி இறுதிப் பெரஹரா இறுதிப்
பெரஹரா 01ஆம் திகதி வீதி உலாவரவுள்ளதோடு தீர்த்தோற்சவம் 02 ஆம் திகதி இடம்பெறும்
இந்நிகழ்வுகளில் தென் இந்திய பக்தர்களும் வருகை தந்து கலந்துகொள்வதும் விசேட
அம்சமாகும்.