ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் மாதம் பிறை 27
நந்தன வருடம் ஆடி மாதம் 03ம் திகதி புதன்கிழமை
THURSDAY ,JULY, 19, 2012
வரு. 80 இல. 170
 
ஹிந்தி சுப்பர் ஸ்டார் ராஜேஸ் கன்னா காலமானார்

ஹிந்தி சுப்பர் ஸ்டார் ராஜேஸ் கன்னா காலமானார்

ஹிந்தி சினி மாவின் முதல் சுப்பர் ஸ்டா ரான ராஜேஷ் கன்னா காலமானார். அவருக்கு வயது 69. உடல் நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் அவர் நேற்று பிற்பகலில் மரணம் அடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்தியில் ஆராதனா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான படங்களில் ராஜேஸ் கன்னா நடித்துள்ளார்.

மேலும் சில படங்களை தயாரித்தும், சில பாடல்கள் பாடியும் உள்ளார். மறைந்த ராஜேஷ் கன்னா பிரபல நடிகை டிம்பிள் கபாடியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்.

இவர்களுக்கு டுவிங்கிள் கன்னா, ரிங்கி கன்னா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களும் நடிகைகள் ஆவர். பிரபல இந்தி நடிகர் அக்ஷ்ய் குமார், ராஜேஷ் கன்னாவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த ராஜேஷ் கன்னாவுக்கு பொலிவுட் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். இறுதிச் சடங்கு இன்று நடைபெறவுள் ளதாக ராஜேஷ் கன்னாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். (ரு – து)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி