* 4 பெண்கள், 2 சிறுவர்கள் உட்பட 41 பேர் கடற்படையால் கைது
* மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதிகளைச் சேர்ந்தவர்கள்
கே. அசோக்குமார்
சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 41 இலங்கையர் நேற்று மட்டக்
களப்புக்கு கிழக்கே கடலில் கடற்படையினரால் கைது செய்யப் பட்டனரென கடற்படை பேச்சாளர்
கொமாண்டர் கோசல வர்ணகுல சூரிய தெரிவித்தார்.
மட்டக்களப்புக்கு கிழ க்கே 35 கடல் மைல் தொலைவில் ஆழ்கடல் வள்ள மொன்றில் பய ணித்துக்
கொண்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாழைச்சேனை, மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த நான்கு பெண்கள் இரண்டு சிறுவர்கள்
உள்ளிட்ட 41 பேரும் கடற்படையின் திருகோண மலை கடற்படை தளத்திற்கு கொண்டுவரப்பட்டு,
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
கடற்படையினரின் விசா ரணைகள் முடிவடைந்தவுடன் அவர்கள் பயணித்த வள் ளத்துடன் 41 பேரும்
மேலதிக விசாரணைகளுக்காக இரகசியப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவிருப்பதாகவும் கொமாண்டர்
கோசல வர்ண குலசூரிய மேலும் தெரிவித்தார்.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லும் போது கடற்படையினரால் இதுவரை 334 பேர் கைது
செய்யப்பட்டனர். ஏழு ஆழ் கடல் மீன்பிடிப் படகுகளும் கைப்பற்றபட்டுள்ளன. (ரு-து)