![]()
|
||
சாதாரண டொக்டர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளில் நிபுணத்துவ சேவை
* மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதிர்ச்சித் தகவல்
வெளிநாடுகளிலிருந்து வருகை தந்துள்ள 184 சாதா ரண டொக்டர்கள் தனியார்
மருத்துவமனைகளில் விசேட நிபுணத்துவ மருத்துவ சேவையில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதன் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடாத்திய செய் தியாளர் மாநாட்டின் போது அரசாங்கத்தின் தலைவரான மருத்துவ நிபுணர் அனுருத்த பாதெ னிய இத்தகவலைத் தெரிவித்தார். இச்செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் குறிப்பிடுகையில், வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை மருத்துவர்கள் 184 பேர் ஏப்ரல் மாதமாகும் போது இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ளார்கள். இலங்கை ஆஸ்பத்திரிகளில் வெளிநாட்டு டொக்டர்கள் கடமையாற்றுவதற்கு மருத்துவ ஒழுங்கு விதிகளின் 67 ஏ பிரிவின் கீழ் தற்காலிகமாக பதிவு செய்ய வேண்டும். இந்த அடிப்படையில் பதிவு செய்து கொண்டுள்ள சாதாரண மருத்துவர்கள் தான் தனியார் மருத்துவ மனைகளில் விசேட நிபுணத்துவ மருத்துவ சேவைகளில் ஈடுபடுகின்றனர். இவ்விடயத்தை நாம் அறிந்தும் உடனடியாக சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள டொக்டர்கள் விசேட நிபுணத்துவ மருத்துவ சேவையில் ஈடுபடுவதற்குரிய தகுதி தொடர்பாக பரிசோதனை செய்யுமாறு கேட்டுக் கொண்டோம். இதனடிப்படையில், சுகாதார அமைச்சு வெளிநாடுகளிலிருந்து வந்து தனியார் மருத்துவ மனைகளில் விசேட நிபுணத்துவ மருத்துவ சேவையில் ஈடுபடும் மருத்துவர்களின் தகுதியை பரிசோதிக்கும் வேலைத் திட்டத்தை மே மாதம் ஆரம்பித்தது. இதற்கேற்ப கிடைக்கப்பெற்ற 18 பேரின் விண்ணப்பப் படிவங்கள் பரீட்சிக்கப்பட்டுள்ளன. இதன்படி இந்த 18 பேரும் விசேட நிபுணத்துவ மருத்துவ சேவையில் ஈடுபடுவதற்குத் தேவையான எந்தத் தகுதியையும் கொண்டவர்களாக இல்லை என்பது கண்டறியப்பட்டிருக்கின்றது. இருப்பினும் இவர்கள் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வருகை தந்துள்ள டொக்டர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிறுவர், பெண் நோயியல், சத்திர சிகிச்சைகள், கண், மூக்கு, காது, எக்ஸ்ரே துறைகளுக்கானனவிசேட நிபுணத்துவ மருத்துவ சேவையில் ஈடுபடுகின்றனர். தகுதியில்லாதவர்கள் விசேட நிபுணத்துவ மருத்துவ சேவையில் ஈடுபடுவதால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் அவர் இச் செய்தியாளர் மாநாட்டின் போது விபரித்தார். |
||
|
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். webmanager@lakehouse.lk |