* மரச்சின்னத்தில் போட்டியிடத் தீர்மானம்
* ஆசனப் பங்கீட்டு பேச்சுவார்த்தை தோல்வி
* அசாத்சாலியும் மு.காவில் போட்டி
ஸாதிக் ஷிஹான்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில்
தனித்துப் போட்டியிடத் தீர்மானித் துள்ளதாகக் கட்சியின் தேசியத் தலைவரும், நீதி
அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஆசன ஒதுக்கீடு தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவுடன் நேற்று இடம்பெற்ற
பேச்சுவார்த்தையில் உடன்பாடு காணப்படாத நிலையில் ஜனாதிபதியின் இணக்கத்துடன்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்குத் தேர்தலில் தனியாக களமிறங்க தீர்மானித்ததாக
அவர் மேலும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து
போட்டி யிடுவதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீடம் ஏற்கனவே
தீர்மானித்து அறிவித்திருந்தது.
கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு அம்பாறை மாவட்டத்தில் 6
ஆசனங்களும் மட் டக்களப்பு மாவட்டத்தில் 3 ஆசனங்களும் திருகோணமலை மாவட்டத்தில் 3 ஆச
னங்களும் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துவந்தது.
இந்த ஆசன ஒதுக்கீடு குறித்து பல தரப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப் பட்டிருந்த
போதிலும் இறுதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர் களுடனும் அமைச்சர்களான பசில்
ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன சுசில் பிரேம்ஜயந்த், டலஸ் அழகப் பெரும ஆகியோருடன்
நேற்றுக்காலை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு காணப்படாத நிலையில் உடன்பாடு
காணப்படாத நிலையயில் ஜனாதிபதி அவர்களின் இணக்கப்பாட்டுடன் தனித்து போட்டியிடத்
தீர்மானித்ததாகக் குறிப்பிட்டார்.
கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில், அதியுயர் பீட உறுப்பினர்கள், கட்சியின்
ஆதரவாளர்கள் மத்தியில் நேற்று ஸ்ரீ. ல. முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடும்
தீர்மானத்தை கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உத்தியோகபூர்வமாக
அறிவித்தார். இதன் போது தலைவரது இந்தத் தீர்மானத்தை அனைவரும் தக்பீர் முழக்கத்துடன்
வரவேற்றனர்.
கட்சியின் தவிசாளர், பிரதி அமைச்சர் பiர் சேகுதாவூத், செயலாளர் நாயகம் எம். ரி.
ஹஸன் அலி எம். பி., எம். சி. பைசல் காஸிம் எம். பி., எச். எம். எம். ஹரீஸ் எம்.
பி., தெளபீக் எம். பி., ஜே. ஸ்ரீ ரங்கா எம். பி., கொழும்பு மாநகர சபை முன்னாள்
உறுப்பினர் அஸாத் சாலி உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இங்கு வருகைத் தந்திருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் ஹக்கீம்:-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை
ஆகிய மூன்று மாவட்டத்தில் தனித்து போட்டியிடுகின்ற போதிலும் அரசாங்கத்திற்கும், மு.
கா. வுக்கும் இடையிலான உறவுகளில் பாதிப்புக்கள் ஏற்படாத வண்ணம் தேர்தல்
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
அரசாங்கத்துடனான எதிர்கால உறவுகள் குறித்தும் ஜனாதிபதி அவர்களுடனான சந்திப்பின்
போது கலந்துரையாடியதாகவும் அமைர்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா, கொழும்பு மாநகர சபை முன்னாள்
உறுப்பினர் அஸாத் சாலி ஆகியோர் மு. காவுக்கு ஆதரவுகளை வழங்குவதாக
குறிப்பிட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மு. கா. தலைவர் ரவூப் ஹக்கீம்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ¤டன் இணைந்து போட்டியிட கொழும்பு
மாநகர சபை முன்னாள் உறுப்பினர் அஸாத் சாலி விருப்பம் தெரிவித்துள்ளார் என்றார்.
எனவே மூன்றில் ஏதாவது ஒரு மாவட்டத்தில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படலாம். அந்தத்
தீர்மானம் இறுதியில் எடுக்கப்படும். அரசியலை பொறுத்தமட்டில் நிரந்தர நண்பனும்
இல்லை. நிரந்தர பகைவனும் இல்லை என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இதனடிப்படையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் திருகோணமலை மாவட்ட தலைமை
வேட்பாளராக கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆர். எம். அன்வரும், அம்பாறை
மாவட்ட தலைமை வேட்பாளா¡ன கிழக்கு மாகாண சபையின் முன்னாள் இணைப்பாளரும், ஓய்வுபெற்ற
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அப்துல் மஜீதும் போட்டியிடவுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்துக்கான முதன்மை வேட்பாளர் இன்னும் முடிவாகவில்லை.