காற்றாலை மின் உற்பத்தியும் குறைந்துள்ளதையடுத்து மீண்டும் 5 மணிநேர மின்தடை
அமுலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வருட கால மாக கடுமையான மின் பற்றாக்குறை நீடிக்கும் நிலையில்
கடந்த 2 மாதங்களாக காற்றாலைகள் மூலம் கிடைத்த மின்சாரத் தால் பல மாவட்டங்களில்
மின்தடை நேரம் கணிசமாக குறைக்கப்பட்டது.
குறிப்பாக அதிக காற்றாலைகள் உள்ள தென் மாவட்டங்களில் 3 மாதங்களாக மின்தடை இல்லாமல்
மக்கள் நிம்மதியாக இருந்தனர். கடந்த மாதம் காற்றாலைகள் அதிவேகமாக சுழன்று மின்
உற்பத்தியில் சாதனை படைத்தன.
அதிகபட்சமாக இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 3,500
மெகவாட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் கிடைத்தது. இந்த நிலையில் கடந்த 3 தினங்களாக
காற்று வீசுவது குறைந்துவிட்டது. ஆடி மாதம் அதிக காற்று வீசும். ஆனால் ஆடிப்
பிறப்பான நேற்று பகல்11 மணிக்கு மேல் வழக்கமாக வீசும் லேசான காற்று கூட வீசாமல்
மின்வாரியத்தினரின் காலை வாரியது.
இதனால் மின் உற்பத்தி கணிசமாகக் குறைந்தது. மின் உற்பத்தி குறைந்ததை அடுத்து பல
இடங்களில்மின் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் மாலையில் இருந்து
அறிவிக்கப்படாத மின்வெட்டு மீண்டும் அமுல்படுத்தப்பட்டது. 45 நிமிட மின்வெட்டு தவணை
முறையில் நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டது.
நேற்று காலை முதல் 3 மணி நேர மின்தடையும் மீண்டும் அமுலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே
மழையின்றி தமிழகத்தில் நீர் மின் நிலையங்களிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள
நிலையில் காற்றாலை மின்சாரமும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.