ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் மாதம் பிறை 27
நந்தன வருடம் ஆடி மாதம் 03ம் திகதி புதன்கிழமை
THURSDAY ,JULY, 19, 2012
வரு. 80 இல. 170

சாதனை வீரர் பாதுகாப்புச் செயலாளரின் நற்பணி தொடர வேண்டும்

சாதனை வீரர் பாதுகாப்புச் செயலாளரின் நற்பணி தொடர வேண்டும்

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு எல்.ரி.ரி.ஈ. பயங் கரவாதத்தை துவம்சம் செய்வதற்கு இராமருக்கு இலக்கும ணன் உறுதுணை புரிந்தது போன்று, உதவிய அவரது இளைய சகோதரரான பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ, ஆற்றிய பணியை இந்நாட்டு மக் கள் என்றுமே மறந்துவிட மாட்டார்கள்.

பாதுகாப்பு செயலாளர் ஒரு சாதனை வீரர். யுத்தத்தை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்த இவர், நாட்டில் புற்றுநோயைப் போன்று வியாபித்திருக்கும் வன்முறைகள், கொள்ளை, கொலை, பெண்களை மானபங்கப்படுத்தல், ஆள்கடத்தல், கப்பம் வாங்குதல், பணத்திற் காக கொந்தராத்து கொலைகள் புரிதல் போன்றவற்றை கட்டுப்படு த்த வேண்டும் என்ற ஜனாதிபதி அவர்களின் விருப்பத்தை செயற் படுத்தும் பணியை ஏற்றுக் கொண்டார்.

சுமார் ஈராண்டுகளுக்கு முன்னர் கொழும்பிலும், தென்னிலங்கையிலும் கட்டு மீறியிருந்த இந்த வன்முறைகளை ஒழித்துக் கட்டுவதற்கு அவர் எடுத்த முயற்சியினால் இந்த வன்முறைகள் இப்போது கணி சமான அளவு குறைந்திருக்கிறது. கொழும்பு மாநகரில் அன்று நில விய வன்முறைகள் பாதுகாப்புச் செயலாளரின் தீவிர முயற்சியி னால் இப்போது 65 சதவீதம் குறைந்திருக்கிறது.

பாதுகாப்பு செயலாளரின் உத்தரவை அடுத்து, பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் நாடெங்கிலும் உள்ள 420 பொலிஸ் நிலை யங்களுக்கும் அனுப்பியிருக்கும் அவசர உத்தரவில், அந்தந்த பிர தேசங்களில் உள்ள குற்றம் இழைப்பவர்களையும் நீதிமன்றத்தில் இரு ந்து பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றங்களுக்கு ஆஜ ராகாதவர்களையும் கைது செய்வதற்கு நீதிமன்றங்கள் 60 ஆயிரம் பிடியாணைகளை பிறப்பித்துள்ள போதிலும் பொலிஸார் சம்பந்தப் பட்டவர்களை கைது செய்வதில் அக்கறை காட்டவில்லை என்றும் உடனடியாக கைது செய்ய வேண்டுமென்றும் அறிவித்துள்ளார்.

இந்த 60 ஆயிரம் பிடிவிறாந்துகள் பிறப்பிக்கப்பட்டவர்களில் கொலை செய் தவர்கள், கொள்ளை அடித்தவர்கள், பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தியவர்கள், கப்பம் எடுத்தவர்கள், ஆட்கடத்தல் செய்தவர் கள் மற்றும் ஜீவனாம்சம் செலுத்த தவறியவர்களும் அடங்குகிறார் கள். இது பற்றி கருத்து தெரிவித்த ஒரு சிரேஷ்ட பொலிஸ் அதி காரி, இம்மாதம் முடிவடைவதற்குள் பெரும்பாலானோரை தாங்கள் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தப் போவதாக அறிவித்தார்.

இவ ர்களைவிட இன்று நாட்டில், குறிப்பாக கொழும்பில் சுமார் 15 பாதாள உலக கோஷ்டிகளின் தலைவர்கள் தலைமறைவாகி தொட ர்ந்தும் கொள்ளை, கொலை, ஆள்கடத்தல், கப்பம் வாங்குதல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று அந்த பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். இவர்களை கைது செய்வதற்கு பொதுமக்க ளின் ஒத்துழைப்பு தங்களுக்கு அவசியம் என்றும் அவர் கூறினார்.

பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ இன்று பல இடங்க ளில் கப்பப் பணம் எடுக்கும் கோஷ்டிகளை கைது செய்து அவர்க ளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளார். கொழும்புத்துறைமுகத் தில் எந்தவொரு பணியை செய்வதற்கும் பாதாள உலக கோஷ்டி யினருக்கு கப்பம் கொடுத்தே ஆக வேண்டும். அது போன்று பேலியகொடையில் உள்ள மீன் சந்தையிலும் கப்பம் கொடுக்காமல் மீன் வியாபாரிகளுக்கு தொழில் செய்ய முடியாத நிலை இருந்தது.

புறக்கோட்டை மெனிங் சந்தையிலும் கப்பம் எடுக்கும் குற்றம் தலை விரித்தாடிக் கொண்டிருந்தது. இவர்கள் அனைவரையும் கைது செய்து, இன்று கொழும்பில் கப்பம் எடுக்கும் தொழிலுக்கு பாதுகா ப்பு செயலாளர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

சுமார் ஈராண்டுகளு க்கு முன்னர் கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள பணம் படை த்த தங்க நகை வியாபாரிகளை கடத்திச் சென்று பணம் பறிக்கும் ஒரு பலம்வாய்ந்த பாதாள உலகைச் சேர்ந்த சில முன்னாள் இரா ணுவ உத்தியோகத்தர்களின் கொட்டத்தையும் பாதுகாப்பு செயலா ளர் அடக்கி யிருக்கிறார்.

கப்பம் கேட்கும் இந்த ஆயுதம் தாங்கிய கோஷ்டியினரின் தொல்லையை தாங்கமுடியாமல் சில தங்க நகை வியாபாரிகள் பாதுகாப்பு செயலாளரிடம் முறைப்பாடு செய்ததை அடுத்து பாதுகாப்பு செயலாளர் அவர்களின் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து தண்டிப்பதற் கும் நடவடிக்கை எடுத்தார்.

இன்று செட்டியார் தெருவில் நகை வியாபாரிகள் எவ்வித பிரச்சினை யும் இன்றி நிம்மதியாக தங்கள் தொழிலை செய்து வருவதற்கு உதவி செய்த பாதுகாப்பு செயலாளருக்கு நன்றி தெரிவிக்கும் முக மாக செட்டியார் தெரு நகை வியாபாரிகள் ஒரு குறிப்பிட்ட பெருந் தொகையை யுத்தத்தினால் பாதிப்பிற்குள்ளான முப்படை வீரர்களுக் கான நிதிக்கு அன்பளிப்பு செய்தார்கள்.

சாதனை வீரர் கோத்தபய ராஜபக்ஷ, பாதாள உலகத்திற்கு எதிராக நட வடிக்கை எடுப்பதுடன் தனது பணியை நிறுத்திவிடாமல் கொழும் பையும், பாரிய கொழும்பு பிரதேசத்தையும் நவீனமயப்படுத்தி அழகு படுத்தும் பணியையும் இப்போது சீராக நிறைவேற்றிக் கொண்டிருக் கிறார். இரவில் கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்திற்கும் கோட்டை பிரதேசத்தில் உள்ள பாராளுமன்ற கட்டிடம் அமைந்து ள்ள பகுதிக்கும் செல்பவர்கள் நாம் சிங்கப்பூர் அல்லது ஹொங் கொங் போன்ற ஒரு நகரத்திற்கு வந்துவிட்டோமா? என்று நினைக் கும் அளவிற்கு இந்தப் பிரதேசம் கண்ணைக் கவரக்கூடிய வகை யில் அழகாக அமைந்திருக்கிறது. பாதுகாப்பு செயலாளரின் இந்த நற்பணி பல்லாண்டுகளுக்கு தொடர வேண்டும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி