ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் மாதம் பிறை 22
நந்தன வருடம் ஆனி மாதம் 29ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY ,JULY, 13, 2012
வரு. 80 இல. 164

இணையத்தளங்களை கட்டாயம் பதியும் சட்டத் திருத்தத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்

புதிதாகப் பதிய 100,000 ரூபா புதுப்பிப்பதற்கு 50,000 ரூபா

செய்திகளை வெளியிடும் இணையத் தளங்களை கட்டாயம் பதிவு செய்யும் வகையில் இலங்கை பத்திரிகை சபை சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தகவல் ஊடகத் துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.இதற்கமைய, செய்திகளை வெளியிடும் இணையத் தளத்தை புதிதாக பதிவதற்காக ஒரு இலட்சம் ரூபாவும், அதனை புதுப்பிப்பதற்காக வருடாந்தம் ஐம்பதாயிரம் ரூபாவும் அறவிடப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

விவரம் »

கடைசிப் பேருந்து மற்றும் அதிகாலைப் பேருந்து போன்ற கிராமப் பிரதேசங்களுக்கான கிராமியப் போக்குவரத்துச் சேவை தொடர்ச்சியாக நடைபெறுவதை உறுதிப்படுத்தி பயணிகளின் நம்பிக்கையை திடப்படுத்துவேன்.

- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

வரட்சிப் பிரதேசங்களுக்கு அவசர நிவாரணம்:
ரூ. 3665 மில். ஒதுக்கீடு

* பாதிக்கப்பட்டோருக்கு மாதாந்தம் 6000/=

* வங்கிக்கடன் மீள செலுத்துவது தற்காலிக நிறுத்தம்

* அபிவிருத்தி திட்டங்களில் விவசாயிகளை பயன்படுத்தல்

வரட்சியினால் பாதிக்கப்பட்ட பிரதேசத் திலுள்ள மக்களின் நலன் கருதி பல்வேறு அவசர நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த அவசர நிவாரணங்களை வழங்கும் சகல வேலைத்திட்டங்களுக்கென அரசாங்கம் 3665 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக . . . . .

விவரம் »

சப்ரகமுவ மாகாண சபைக்கு இ. தொ. கா. தனித்துப் போட்டி

சப்ரகமுவ மாகாண சபைக்காக நடை பெறவுள்ள தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சேவல் சின்னத்தில் தனித்து போட்டியிடவுள்ளதாக இ. தொ. க.வின் தலைவரும், பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.பிரதேச தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக இ.தொ.கா தீர்மானித் திருந்தது.

விவரம் »

தகவல் ஊடகத்துறை அமைச்சின் செயலாளராக சரித்த ஹேரத்

தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் புதிய செயலாளராக சரித்த ஹேரத் நிய மிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்த நியமனத்தை வழங்கினார்.இதேவேளை 18 அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நேற்று நியமிக் கப்பட்டனர்.
 

புதிய சட்டமா அதிபர் நியமனத்திற்கு பாராளுமன்ற பேரவை அங்கீகாரம்

அஸ்வர் எம்.பி. தகவல்

பதில் சட்ட மா அதிபர் பாலித பெர்ணான்டோவை சட்ட மா அதிபராக நியமிப் பதற்கு பாராளுமன்ற பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.பாராளுமன்ற பேரவை நேற்றுக் காலை கூடிய போது இந்த நியமனத்திற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக பேரவையின் உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் குறிப்பிட்டார்.

விவரம் »


 களுத்துறை மாவட்ட விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் அளுத்கம ‘ஈடின் கிராண்ட்’ ஹோட்டலில் நேற்று நடைபெற்ற போது.


 “தேசிய டெங்கு ஒழிப்பு மாதத்தை முன்னிட்டு உங்கள் வீடுகளுக்கு வரும் உத்தியோகத்தர்கள், பொலிஸார், படைவீரர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்.”
டெங்கு ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி