ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் மாதம் பிறை 21
நந்தன வருடம் ஆனி மாதம் 28ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY ,JULY, 12, 2012
வரு. 80 இல. 163
 

ஸ்பெயினில் சிக்கன நடவடிக்கை: சுரங்க தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஸ்பெயினில் சிக்கன நடவடிக்கை: சுரங்க தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஸ்பெயினில் வரவு செலவுத் திட்டத்தை சமப்படுத்துவதற்கு சிக்கன நடவடிக்கையை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து ஸ்பெயின் பிரதமர் மரியா னோரஜாய் நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

இந்நிலையில் அரசின் சிக்கன நடவடிக்கைக்கு எதிராக ஸ்பெயின் தலைநகரில் ஆயிரக்கணக்கான நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் கடந்த இரு தினங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டுள்ளனர். ஸ்பெயின் அரசின் புதிய சிக்கன நடவடிக்கைகக்கு அமைய வட் வரி அதிகரிக்கப்படவுள்ளதோடு தொழிலாளர் சலுகைகள் நிறுத்தப்படவுள்ளது. இந்த சிக்கன நடவடிக்கைகள் உடன் அமுலுக்கு கொண்டுவரப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

ஸ்பெயினில் சரிவுக்குள்ளாகியுள்ள வங்கிகளை சீர்செய்யும் வகையில் ஐரோப்பிய நிதி அமைச்சர்கள் ஸ்பெயினுக்கு 30 பில்லியன் யூரோக்களை வழங்க இணங்கியதைத் தொடர்ந்தே ஸ்பெயின் இந்த சிக்கன நடவடிக்கையை அறிமுகம் செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஸ்பெயினிலுள்ள நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர்.

தலைநகர் மெட்ரிட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசின் நடவடிக்கையால் எதிர்காலத்தில் நிலக்கரி சுரங்க தொழிலில் 30,000 தொழில் வாய்ப்புகள் இழக்க நேரிடும் என சுரங்க தொழிலாளர் சங்கங்கள் எச்சரித்துள்ளன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி