ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் மாதம் பிறை 21
நந்தன வருடம் ஆனி மாதம் 28ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY, JULY,12, 2012

Print

 
பாகிஸ்தான் 188 ஓட்டங்களால் முன்னிலை ; அசார் அலி சதம்

பாகிஸ்தான் 188 ஓட்டங்களால் முன்னிலை ; அசார் அலி சதம்

பல்லேகலையில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடும் பாகிஸ்தான் அணி 8 விக்கட்டுகளை இழந்து 299 ஒட்டங்களைப் பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணி 188 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது. நேற்றைய நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மொஹமது ஹபீஸ் மற்றும் அசார் அலியின் நிதான துடுப்பாட்டத்தின் காரணமாக இந்த இலக்கை அடைய முடிந்தது.

தன்படி பாகிஸ்தான் அணி 3 விக்கட்டுகள் கைவசம் இருக்கும் நிலையில் 200 ஓட்டங்கள் முன்னிலையில் இருக்கின்றது.

டெஸ்ட் போட்டிகளில் 4 சதத்தை பெற்ற அசார் அலி 136 ஓட்டத்தை பெற்றுக் கொடுத்த அதே வேளை ஹபீஸ் 52 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். இவர்கள் இருவரும் 3வது விக்கட்டுக்காக 94 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அடுத்து துடுப்பெடுத்தாட வந்த யூனிஸ்கான் 19 ஓட்டங்களையும் அணித்தலைவர் மிஸ்பா 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 4 விக்கட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இளம் துடுப்பாட்ட வீரர் அசாத் சபீக், அசார் அலி ஜோடி இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு சிறப்பாக முகம் கொடுத்து 5வது விக்கட்டுக்காக 100 ஓட்டங்களை குவித்தனர். அசார் அலியின் விக்கட்டை கைப்பற்றிய பெர்ணான்டோ அடுத்த ஓவரில் மொஹமட் சமியை எல்.பி.டபிள்யு. முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய உமர் குல் ஓட்டம் எதுவும் பெறாத நிலையில் ஹேரத்தின் பந்து வீச்சில் டக் அவுட் ஆனார்.

அஜ்மல் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் அசாத் சபீக் 55 ஓட்டங்களையும் பின்னர் சபிக்குடன் ஜோடி சேர்ந்த அத்னான் அக்மல் இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். பந்துவீச்சில் ஹேரத் 4 விக்கெட்டையும், பெர்ணான்டோ 3 விக்கெட்டையும், குலசேகர 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இன்று ஆட்டத்தின் இறுதி நாளாகும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

webmanager@lakehouse.lk