ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் மாதம் பிறை 21
நந்தன வருடம் ஆனி மாதம் 28ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY ,JULY, 12, 2012
வரு. 80 இல. 163
 

மினீpஹீ ணிrஜிசிthஹீg;gசி

இவ்வார புனிதர்

மினீpஹீ ணிrஜிசிthஹீg;gசி

த்தாலியிலுள்ள நேர்சியா என்ற பிரதேசத்தில் புனித ஆசிர்வாதப்பர் கி.பி. 480 ம் அண்டில் பிறந்தார். இவர் உரோமை நகரில் கல்வி கற்றார். அங்கு வாழ்ந்திருந்த இளைஞர்களின் பாவ வாழ்க்கையில் மனம் நொந்து இவர் உலகத்தைத் துறந்து காட்டிற்குச் சென்றார். சுபியாக்கோ எனும் மலையில் இருந்த ஒரு குகையில் தவம் செய்தும், செபித்தும் வாழ்ந்தார்.

ரோமனூஸ் என்ற துறவி இவருக்கு உணவும் உடையும் அளித்தார். இவரைப் பற்றிக் கேள்விப்பட்டு பலர் இவரது சீடராயினர். அவர்களுக்காக இவர் பல துறவற மடங்களைக் கட்டினார். மேலும் சட்டங்களை இயற்றித் தந்தார்.

துவிறகள் தங்களை அடக்கி ஆள வேண்டும், ஏதாவது ஒறுத்தல் செய்ய வேண்டும், தாழ்ச்சி, கீழ்ப்படிதல், செபம், மெளனம், மறைந்த வாழ்வு இவற்றை அவர்கள் நேசிக்க வேண்டும், உலகின் மீது பற்றின்றி வாழ வேண்டும் என்று இவர் வலியுறுத்தினார். செபிப்போம், உழைப்போம் என்பதே இவரது தாரக மந்திரமாகும்.

இச்சட்டங்களை ஏற்றுக் கொள்ளாத சிலர் ஒருநாள் அவரது உணவில் நஞ்சு கலந்தனர். அவர் உணவை ஆசிர்வதித்த போது நஞ்சு கலந்த உணவு இருந்த பாத்திரம் வெடித்து சிதறியது. 543 மார்ச் 21ம் நாள் இவருக்கு காய்ச்சல் வந்தது. தம்மைக் கோவிலுக்குக் கொண்டு செல்லுமாறு கூறினார்.

அங்கு அவர் தில்லிய நற்கருணையை உட் கொண்டு பலி பீடத்தின் முன் கைகளை உயர்த்தி செபித்தவராறே உயிர் துறந்தார். புனிதரின் திருவிழா ஜூலை 11ம் திகதியாகும். தற்போதுள்ள பரிசுத்த பாப்பரசர் புனித ஆசிர்வாதப்பர் (பெனடிக்ட்) பெயரைக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி