ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் மாதம் பிறை 21
நந்தன வருடம் ஆனி மாதம் 28ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY ,JULY, 12, 2012
வரு. 80 இல. 163
 

தேவ இரகசியத்தின் ரோஜா மாதாவின் திருவிழா நாளை

தேவ இரகசியத்தின் ரோஜா மாதாவின் திருவிழா நாளை

தேவ இரகசியத்தின் ரோஜா மாதாவின் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது.

தேவ இரகசித்தின் ரோஜா மாதாவின் பக்தர்கள் ஒன்றிணைந்து கொழும்பு ஜெம்பட்டாவீதி மோடி மண்டபத்தில் அன்னையின் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர்.

நாளை 13ம் திகதி காலை 9.30 மணிக்கு அன்னையின் திருச்சுரூப பவனி இடம்பெறுவதுடன் காலை 10.00 மணிக்கு காரணிக்கங்கள் ஒப்புக் கொடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, தேவத்தை பெஸிலிட்டா பேராலயத்திலும், ஜாஎல படகம புனித அந்தோனியார் ஆலயத்திலும் நீர்கொழும்பு- கடோல்கல உயர்ந்த இயேசு ஆலயத்திலும் மக்கோன புனித மரியாள் ஆலயத்திலும் களனி தளுகம புனித பிரான்ஸிஸ் டி. சேல்ஸ் ஆலயத்திலும் நாளைய தினம் தேவ இரகசியத்தின் ரோஜா மாதாவின் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.

கொழும்பில் பிரதி மாதமும் முதல் வியாழக்கிழமையும் முதல் சனிக்கிழமையிலும் மாதாவிற்கான விசேட ஜெபமாலை தியானங்கள் கொட்டாஞ்சேனை 7வது ஒழுங்கையில் 14ம் இலக்கத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிட்டத்தக்கது. (ஸ)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி