ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் மாதம் பிறை 21
நந்தன வருடம் ஆனி மாதம் 28ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY ,JULY, 12, 2012
வரு. 80 இல. 163
 

திருப்பலிப் ப+சை மூலமான வாழ்வின் வரப்பிரசாதங்கள்

திருப்பலிப் ப+சை மூலமான வாழ்வின் வரப்பிரசாதங்கள்

வெள்ளப் பெருக்கினின்று உயிர் பிழைத்த நோவா அரராத்து மலைத் தொடர் மீது பீடம் அமைத்து ஆண்டவருக்கு எரி பலி செலுத்தினார். அதில் உளங்கனிந்த ஆண்டவர்.அவ்வேளையில் இரண்டு வாக்குறுதி அளித்தார். "இப்பொழுது நான் செய்தது போல இனி எந்த உயிரையும் அழிக்கவே மாட்டேன்: சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப்பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது" (தொநூ 8:21:9:21) நோவாவில் ஆண்டவர் ஆரம்பித்து வைத்த சாபமோசனம் மற்றும் அழிவினின்று விடுதலை ஆகியன பூர்ணமாக நிறைவேறியது ஆண்டவர் இயேசுவில் தான். இயேசுவின் சிலுவைப் பலியில்தான்.

ஆண்டவரின் பலி அதுவரை செலுத்தப்பட்ட எல்லா பலிகளின், அவை வழியாக வழங்கப்பட்ட அருளின் உச்சமாகும். அருள் பூர்ணமாக நிறைவேறியதாகும். (மத். 5:17) நோவா பலி செலுத்திய போது வானவில் தோன்றியது. (தொநூ 9:12-16) அப்போது மனித உள்ளம் மகிழ்ச்சியடைந்தது.

வானவில் ஓர் அடையாளமாகும். இயேசுவின் பலியின் முன் அடையாளம் ஆகும். இயேசுவின் பலி எல்லா இதயங்களையும் அழகுள்ளதாக மாற்றுகின்றது. விசுவாசிகளின் இதயத்தில் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, நன்மை முதலிய தூய ஆவியின் பலன்கள் நிறைந்திடும்.

நோவா பேழையினின்று இறங்கி வந்து ஆண்டவருக்குப் பலி செலுத்தியது போல நாமும் நமது வீடாகிய பேழையினின்று இறங்கி கோவிலுக்குச் சென்று திருப்பலிப் பூசையில் பங்கு கொள்ளும் போது, வாழ்க்கையில் தோன்றும் பெருங்காற்று, பெருவெள்ளம் முதலிய எல்லா பிரச்சினைகளுக்கும் பரிகாரம் கிடைக்கும்.

ஆண்டவர் நம் பக்கம் இருக்கும் புனிதமான நேரம்தான் திருப்பலிப் பூசையின் நேரம். திருப்பாடல்களின் ஆசிரியர் பின்வருமாறு சான்று பகர்கின்றார். ஆண்டவர் என்பக்கம் இருக்க நான் ஏன் அஞ்சவேண்டும்? மனிதர் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும்? எனக்குத் துணை செய்யும் ஆண்டவர் என் பக்கம் உள்ளார்.

என்னை வெறுப்போர்க்கு நேர்வதைக் கண்ணாரக் காண்பேன்" (திபா 1186-7) திருப்பலியில் ஆண்டவர் கோதுமை அப்பத்தின் திராட்சை இரசத்தின் வடிவில் வருவது நமக்கு உதவி செய்வதற்காகவே அவர் ஒரு போதும் நம்மைக் கைவிடமாட்டார். (எபி 13:5) இந்த நம்பிக்கை நமது வாழ்வில் வானவில்லாக இருக்கட்டும் ஆம்! ஆண்டவர் தாம் நமது மகிழ்ச்சி!

விசுவாசிகளின் ஆற்றலும், பாடலும், மீட்பும் ஆண்டவரே என்கிறார். திருப்பாடல் ஆசிரியர் (118:14) இதை உணர்ந்துகொள்ள ஆண்டவர் ஏற்பாடு செய்யும் திருப்பலியில் பங்குகொள்ள வேண்டும். ஒரேபில் வானதூதர் அடையாளமாக ஒரு பலி பீடத்தைச் செய்தார். ஒரேபு மலையில் முட்புதர் நெருப்பால் எரிந்து கொண்டிருந்தது. ஆனால் அம்முட்புதர் தீய்ந்து போகவில்லை. அதன் நடுவே தீப்பிழம்பில் ஆண்டவர் மோசேக்குத் தோன்றினார். ஆண்டவர் சொல்ல மோசே தமது மிதியடிகளைக் கழற்றினார். ஆண்டவரை அணுகிச் சென்றார்.

ஆண்டவர் கட்டளையிட மோசே தமது கையில் வைத்திருந்த கோலைத் தரையில் விட்டெறிந்து மீண்டும் எடுத்தார். (விப 3:1- 6:4;1-4) பலிபீடத்தில் ஆண்டவர் அளித்த கோல் மோசேக்கு வல்லமையாக அமைந்தது.

பார்வோனைப் போன்ற மன்னர்கள் மோசேக்குக் கீழ்ப்படிந்தனர். "இது கடவுளின் கைவன்மையே" என்று எதிரிகள் கூட ஏற்றுக்கொண்டனர். (விப 8:19) ஒரேபு முட்புதர் ஓர் அடையாளமாகும். அது பலிபீடமாகும். இது அன்று மோசேக்கு வல்லமை தந்தது போல் இன்று இறைவன் தமது ஒரே மகஎன் வாயிலாகத் தூய ஆவியை அனுப்பித் திருச்சபைக்கு வல்லமை அளிக்கின்றார்.

விசுவாசிகளான நாம் தூய்மையின்மை அதர்மம் அநீதியாகும். மிதியடிகளை, மன வருத்தம் மனமாற்றத்தால் அவிழ்த்து, நமது கையிலுள்ள கோலான நமது உள்ளம் நமது வாழ்வை ஆண்டவருக்குச் சமர்ப்பித்தால், அவர் அதைத் தூய்மையாக்கி நமக்கு வல்லமையாகத் திருப்பித் தருவார்.

அப்போது நாம் சந்திக்கிறவர்களும், நம்மைச் சந்திப்பவர்களும் இறைவனின் வல்லமையை உணர்ந்து கொள்வார்கள். தம்மிடம் நம்பிக்கை வைப்பவர்களுக்கு வல்லமை அளிக்கப்புதிய ஏற்பாட்டில் ஆண்டவர் ஏற்பாடு செய்திருக்கிற பலிபீடம்தான் திருப்பலிப்பூசை. நாம் முன்பு தோல்வி அடைந்த இடங்களில் இப்போது வெற்றி கிடைப்பது நிச்சயம். திருத்தூதர்களின் வாழ்க்கை இதற்குச் சான்று பகர்கின்றது அல்லவா?

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி