தேயிலை கொழுந்து பறிக்கச் சென்ற பெண் வாவிக்குள் இருந்து சடலமாக மீட்பு
தேயிலை கொழுந்து பறிக்கச் சென்ற பெண் வாவிக்குள் இருந்து சடலமாக மீட்பு
லக்ஷ்மி பரசுராமன்
காலி, ஹினிதும தெற்கே தேயிலை கொழுந்து பறிக்கச் சென்றபோது காணமல்போன பெண்
தோட்டத்துக்கு அருகே செல்லும் வாவிக்குள்ளிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஹினிதும தோட்டத்தைச் சேர்ந்த பள்ளிய குருகே சந்திரானி (46) எனும் பெண்ணே
வாவிக்குள்ளிருந்து சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் அத்தியட்சகர்
அஜித் ரோஹண ஊர்ஜிதம் செய்துள்ளார்.
மேற்படி பெண் வீடு திரும்பாததையிட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய
ப்பட்டது. இவரை தேடி வந்த பொலிஸ் அதிகாரிகளும் ஊர் மக்களும் இறுதியாக குறித்த
பெண்ணின்
சடலத்தை வாவிக்குள்ளிருந்து மீட்டனர்.
சடலம் ஹினிதும மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. ஹினிதும பொலிஸார்
விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.