ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் மாதம் பிறை 21
நந்தன வருடம் ஆனி மாதம் 28ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY ,JULY, 12, 2012
வரு. 80 இல. 163
 
அடித்துக் கொலை செய்யப்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகரின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு

அடித்துக் கொலை செய்யப்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகரின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு

கடமை நேரத்தின் போது கொடூரமான முறையில் அடித்து படுகொலை செய்யப்பட்ட பொது சுகாதார பரிசோதகர் கே.எம்.எம். பZலின் குடும்பத்தினருக்கு விசேட நஷ்டஈடு வழங்கவென அமைச்சரவைப் பத்திரமொன்றைச் சமர்பிக்கவிருப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பாக அமைச்சர் தொடர்ந்தும் கூறுகையில், டெங்கு நுளம்பு ஒழிப்பு தொடர்பான பணிகளில் தம்பலகாமம் பிரதேசத்தில் ஈடுபட்டிருந்த பொது சுகாதார பரிசோதகர் கே.எம்.எம். பZல் கொடூரமான முறையில் அடித்து படுகொலை செய்யப் பட்டதை அமைச்சர் என்ற வகையிலும் அரசாங்கத்தின் சார்பிலும் மீண்டும் வன்மையாகக் கண்டிப்பதுடன் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

பொது மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டே இவர்கள் டெங்கு நுளம்பு ஒழிப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். அவர்களை கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும். பொது சுகாதார பரிசோதகர்களும் நுண்ணுயிரியல் நிபுணர்களும் பொதுமக்களின் நலன்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர்.

அவர்களைப் பாதுகாப்பது எமது கடமையாகும். அந்தவகையில் கடமை நேரத்தில் கொடூரமாக அடித்து படுகொலை செய்யப்பட்டிருக்கும் பொது சுகாதார பரிசோதகர் பZலின் குடும்பத்தினருக்கு விசேட நஷ்டஈடொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளேன். இதற்கென விசேட அமைச்சரவைப் பத்திரமொன்றை அமைச்சரவைக்கு விரவில் சமர்ப்பிக்கவுள்ளேன் என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி