இந்திய கிராமியத்துறை அபிவிருத்தி அமைச்சர் ஜெயராம் ரமேஷ் மூன்று நாள்
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தடைந்தார்.
வெள்ளிக்கிழமை வரை நாட்டில் தங்கியிருக்கும் இந்திய அமைச்சர் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.
பீரிஸ் ஆகியோரை சந்தித்து உரையாடுவார். லக்ஷ்மன் கதிர்காமர் நிலையம் மற்றும்
சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையம் ஆகியவற்றிலும் இந்திய அமைச்சர்
விரிவுரைகளை நடத்துவார்.