திருமுறிகண்டியில் 18 குடும்பங்களும் இன்று சொந்தக்காணியில் மீள்குடியேற்றம்
திருமுறிகண்டியில் 18 குடும்பங்களும்
இன்று சொந்தக்காணியில் மீள்குடியேற்றம்
காணிகள் அடையாளம் காணப்பட்டதால்
முரண்பாடுகள் தீர்ந்தன
மகேஸ்வரன் பிரசாத்
காணிகளை அடை யாளம் காண்பதில் ஏற்பட்ட சிக்கல் கார ணமாக முல்லைத்தீவு திருமுறிகண்டி
பகுதியில் மீள்குடியமர்த்தப் படாத 18 குடும்பங்களையும் இன்று மீள்குடியேற்ற
நடவடிக்கை எடுத்திருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நா.
வேதநாயகன் தெரிவி
த்தார். இந்த 18 குடும்பங்க ளும் தமது சொந்தக் காணிகளிலேயே மீள்குடியமர்த்தப்படவிரு
ப்பதாக அவர் குறிப் பிட்டார். இவர்களை மீள்குடியமர்த்து வதற்கான அனுமதி
மீள்குடியேற்ற அமைச்சிடமிருந்து கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
கடந்த மாதம்
23 ஆம் திகதி திருமுறிகண்டி பிரதேசத்தில் 47 குடும்பங்களை மீள்குடியேற்ற நடவடிக்கை
எடுக்கப்பட்டிருந்தது. இவற்றில் 18 குடும்பங்களின் காணிகளை அடையாளம் காண்பதில்
சிக்கல் ஏற்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இவர்கள் மீண்டும் நலன்புரி நிலையத்துக்கு
அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறிப்பிட்ட 18 குடும்பங்களில் 3 குடும்பங்கள் தவிர ஏனைய குடும்பங்களின்
காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்
குறிப்பிட்டார். காணிகள் அடையாளம் காணப்படாத 3 குடும்பங்களும் ஏனையவர்களுடன் இணைந்து
இப்பகுதியிலேயே மீள்குடியேற இணங்கியுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் சுய விருப்பிலான
ஒப்புதல் கடிதங்களைச் சமர்ப்பித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவர்களை மீள்குடியமர்த்துவது தொடர்பான அனுமதிக் கடிதம் மீள்குடியேற்ற
அமைச்சிலிருந்து எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கமைய 18 குடும்பங்களையும்
மீள்குடியேற்ற இன்று நாம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக திருமுறிகண்டியில் இடம்பெயர்ந்த மக்களை வேறு இடங்களில் மீள்குடியேற்றும்
முயற்சிகள் எடுக்கப்படுவ தாக முன்னர் பிரசாரங்கள் முன்னெடுக்க ப்பட்டிருந்தன.
எனினும் அவ்வாறு முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களை மீள்குடியேற்ற அமைச்சும்,
முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் மறுத்திருந்தன.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் சிவநகர் பகுதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 140
குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்படவிருப்பதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் வேதநாயகன்
தெரிவித்தார். இவர்களை மீள்குடியமர்த்துவதற்கான பாதுகாப்பு அனுமதி
கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.