கம்போடியாவில் பரவிவரும் மர்மமான நோய் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்குள் 61
குழந்தைகள் மரணமடைந்துள்ளன. 7 வயதுக்குட் பட்ட குழந்தைகள் அடையாளம் காணப்படாத இந்த
நோய் காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு சில தினங்களுக்கும் மரணமடைந்
துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த நோய் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கம்போடிய சுகாதார அமைச்சு
மற்றும் சர்வதேச சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நரம்பியம்
மற்றும் கடுமையான சுவாச நோய்க்கான அறிகுறிகள் இந்த அடையாளம் காணப்படாத நோயில்
தென்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தென் கம்போடிய மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 63 குழந்தைகளில்
61 குழந்தைகள் இந்த நோய் காரணமாக மரணமடைந் துள்ளனர். எனினும் இந்தக் குழந்தைக ளுக்கு
இடையில் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
எனினும் இந்த நோய் குறித்த
விசாரணைகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஐ. நா. வுக்கான
கம்போடியாவின் பொது மருத்துவ பரிசோதகர் குழுவின் டொக்டர் நிமா அஸ்கரி, இந்த நோய்
குறித்து குறிப்பாக சொல்வதற்கு கடினம் என குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அதிக காய்ச்சல், கடுமையான மார்பு நோய் அறிகுறிகள் சில குழந்தைகளுக்கு
இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.