ஜப்பானின் டூனா கிங் என் றழைக்கப்படும் தொழிலதிபர் கியோமுரா கோப ரேஷன் நிறுவனத்
தலைவர் கியோஷி கிமுரா இன்று 6 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.
கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ணவின் அழைப்பின்
பேரில் இலங்கை வரும் அவர் இலங்கையில் மீன்பிடித்துறைக்கு நவீன தொழில்நுட்பத்தை
உள்வாங்குவது குறித்தும் அமைச்சரிடம் கலந்துரை யாடவுள்ளார்.
உலகம் முழுவதும் நூற்றுக்கும் அதிக மான தமது நிறுவனத்தின் கிளைகளை கொண்டுள்ள டூனா
கிங் 20 மீற்றர் நீளம் கொண்ட 54 மீன்பிடி கப்பல்களுக்கும் உரிமையாளராகவும் உள்ளார்.
ஒவ்வொரு கப்பிலிலும் 1877 மெற்றிக்தொன் மீன்களை களஞ்சியப்படுத்தும் வசதியுமுள்ளது.
தினம் ஒன்றுக்கு ஒரு மீன்பிடிக் கப்பலில் 54 மெற்றித்தொன் மீன்பிடிக்கப்படுகிறது.
ஜப்பானில் மட்டும் அவருக்குச் சொந்தமான கடலுணவு உற்பத்தி நிறுவனங்கள் 28 உள்ளன.
3000 கடலுணவு சிற்றூண்டிச்சாலைகள் உள்ளன.
சில தினங்கள் இலங்கையில் தங்கியிருக்கும் கியோஷி கிமுரா இலங்கையில் மீன்பிடித்துறை
பற்றியும் ஆராயவுள்ளார்.