நெல் கொள்வனவு நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் மேலும் 2 பில்லியன் ரூபாவை
ஒதுக்குவதற்குத் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நிதி திட்டமிடல் அமைச்சர் என்ற ரீதியில்
அமைச்சரவைக்கு விடுத்துள்ள வேண்டுகோளுக்கு இணங்கவே ஏற்கனவே தீர்மானிக்கப் பட்ட
தொகைக்கு மேலதிகமாக 2 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர்
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
பெரும் போகத்தில் வவுனியா, முல்லைத்தீவு, பொலன்னறுவை மாவட்டங்களில் விளைச்சல்
அதிகரித்துள்ள நிலையில் அவற்றைக் கொள்வனவு செய்யும் வகையிலேயே மேற்படி நிதி
ஒதுக்கப்பட்டுள்ளதென அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது: 2011 - 2012 பெரும்போகத்தில் நெல்
விளைச்சல் 33 வீதத்தால் அதிகரித்தமை காரணமாக திறைசேரியினால் ஒதுக்கப்பட்ட 1015
மில்லியன் ரூபா நிதி 1340 மில்லியனாக அதிகரிப்புச் செய்யப்பட்டது.
அத்துடன் நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு நெல் கொள்வனவுக்காக வழங்கப்படும் நிதி 1900
மில்லியனிலிருந்து 2000 மில்லியனாக அதிகரிகப்பட்டு மாவட்ட செயலகங்களுக்கு வழங்கப்
படவுள்ளது.
அதேவேளை, மக்கள் வங்கி மூலம் நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு வழங்கும் கடனை 1900
மில்லியனிலிருநது 2000 மில்லியனாக அதிகரிக்கவும் இலங்கை வங்கியின் கடன் தொகையான
1600 மில்லியனை 2600 மில்லியனாக அதிகரி க்கவும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இவ்வாறு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார். (ஸ)